உதயமானார் சனி: இனி இந்த ராசிகளின் தொல்லைகள் தீரும், மகிழ்ச்சி அதிகரிக்கும், லாபம் பெருகும்

Sani Peyarchi Palangal 2024: ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. சனி பகவானின் அனைத்து மாற்றங்களும் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

Sani Peyarchi Palangal 2024: கிரக மாற்றங்கள் பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு கிரகத்திற்கு ஒரு தனிப்பட்ட முக்கியத்துவம் உள்ளது. சமீபத்தில் சனி பகவான் கும்ப ராசியில் உதயமானார். சனி பகவானின் உதயம் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நல்ல பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்

1 /10

கிரகங்கள் அவ்வப்போது ராசி மாற்றம், நட்சத்திர மாற்றம், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர நிவர்த்தி, வக்ர பெயர்ச்சி என பலவித மாற்றங்களை மேற்கொள்கின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகிறது

2 /10

அனைத்து 12 கிரகங்களிலும் மிக முக்கியமான கிராமமாக கருதப்படும் சனி பகவான் மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர்களுக்கு பலன்களை அளிக்கிறார். இதனால அவர் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார்

3 /10

சனி பகவானின் ஒவ்வொரு சிறிய அசைவும் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் அவர் கும்பத்தில் உதயமானார்

4 /10

சனி உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் பொற்காலம் பிறக்கும். இவர்கள் வாழ்வில் பலவித வெற்றிகளை பெறுவார்கள். நிதிநிலை மேம்படும். வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இங்கே காணலாம்.

5 /10

மேஷம்: சனி பகவானின் உதய நிலை மேஷ ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மேஷ ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.  

6 /10

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சனி உதயம் சாதகமான பலன்களை கொடுக்கும். இந்த காலத்தில் பணி நிமித்தமாக பலவித பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் இப்பொழுது தீர்ந்துவிடும்.

7 /10

சிம்மம்: சனி உதயம் சிம்ம ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக வந்துள்ளது. இதனால் இதுவரை நீடித்து வந்த கடன்கள் இப்பொழுது தீரும். பணி இடத்தில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்

8 /10

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். சனி உதயத்தின் தாக்கத்தால் பலவித சிக்கல்களை எளிதாக சமாளிப்பீர்கள். குழந்தைகளால் நல்ல செய்தி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். வாழ்க்கை அமைதியாக இருக்கும்.

9 /10

தனுசு: தனுசு ராசி மாணவர்களுக்கு இப்பொழுது மிக நல்ல நேரம். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் வெற்றி காண்பார்கள். வணிகத்தில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு அதிகமாகும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்

10 /10

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.