பல விதமான சரும பிரச்சனைகளுக்கு தீர்வாகும் வேப்பிலை - மஞ்சள் கூட்டணி!

மஞ்சள் மற்றும் வேப்ப இலையில் ஆயுர்வேத மருத்துவ குணங்கள் நிறைந்ததாக கருதப்படுகிறது. வேப்பபிலை சாற்றில் மஞ்சள் கலந்து குடித்தால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. 

வேப்பிலை மற்றும் மஞ்சளால் பல வகையான உடல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் இவை இரண்டையும் சேர்த்து பயன்படுத்தினால் ஏற்படும் அற்புத நன்மைகள் பற்றி தெரியுமா...

 

1 /4

வேப்ப இலைகள் மஞ்சள் பொடி போட்டு கொதிக்க வைத்த நீரை கலந்தோ, வேப்பிலை போட்டு ஊற வைத்த தண்ணீரில் குளித்தால், தோல் தொடர்பான எந்த வகையான ஒவ்வாமையையும் போக்கிவிடலாம் என ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர்.  

2 /4

வேப்பிலை, மஞ்சளைப் பயன்படுத்தி சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். இது இறந்த சரும செல்கள் மற்றும் முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவுகிறது.

3 /4

மஞ்சளில் கால்சியம், இரும்புச்சத்து, சோடியம், ஆற்றல், புரதம், வைட்டமின் ஈ, வைட்டமின் சி, நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது. வேம்புக்கு ஆன்டி-செப்டிக், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நீரிழிவு எதிர்ப்பு போன்ற பண்புகள் உள்ளன. வேப்பிலை மற்றும் மஞ்சளை சேர்த்து சாப்பிட்டால், வைரஸ் காய்ச்சலில் இருந்து உடலை பாதுகாக்கலாம். இது தவிர, இந்த இரண்டையும் சேர்த்துப் பயன்படுத்து, பல வகையான பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது.

4 /4

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேம்பு மற்றும் மஞ்சளை பயன்படுத்தலாம். வேம்பு மற்றும் மஞ்சள் அவற்றின் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் காரணமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.  (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)