டீயுடன் சாப்பிடக் கூடாத விஷயங்கள்: டீ பிரியரா நீங்கள்? பெரும்பாலான தேநீர் பிரியர்கள் தேநீருடன் சில ஸ்னாக்சை சேர்த்து சாப்பிட விரும்புவார்கள். ஆனால், தேநீருடன் சிலவற்றை சேர்த்து சாப்பிட்டால், அதனால் பல பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால், இந்த பக்க விளைவுகளை பற்றி தெரிந்துகொள்வது மிக முக்கியமாகும். பலருக்கு டீ அருந்தும் நேரம் அவர்களுக்கான நேரமாக உள்ளது. இந்தியாவில் தேநீர் அதிக மக்களால் குடிக்கப்படுகிறது. சிலர் அதை தேசிய பானம் என்றும் அழைக்கிறார்கள்.
தேநீரும் வெவ்வேறு வழிகளில் தயாரிக்கப்பட்டு குடிக்கப்படுகிறது. சிலருக்கு பாலுடன் சேர்த்து டீ குடிப்பது பிடிக்கும், சிலருக்கு பால் இல்லாமல் பிளாக் டீ பிடிக்கும். சிலருக்கு லெமன் டீ பிடிக்கும். இது தவிர உடல் எடையை குறைக்க சிலர் க்ரீன் டீயையும் குடிக்கிறார்கள். எந்த வகையான டீ குடித்தாலும், டீ உடன் கண்டிப்பாக சாப்பிடக் கூடாத பொருட்கள் என சில உள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
சிலர் உடல் எடையை குறைக்க லெமன் டீ குடிப்பார்கள். ஆனால் இதைச் செய்வது உங்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். பெரும்பாலான மக்கள் காலையில் வெறும் வயிற்றில் லெமன் டீ குடிக்கிறார்கள். ஆனால் தேயிலை இலைகளுடன் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால், தேநீர் அமிலமாக மாறும். இதனால் வீக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? வெறும் வயிற்றில் லெமன் டீ குடித்தால், நெஞ்செரிச்சல், அமில வீச்சு போன்ற பிரச்சனைகள் வரலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். நீங்கள் ஏற்கனவே அமிலத்தன்மையால் பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் எலுமிச்சை தேநீரை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.
பெரும்பாலான மக்கள் டீயுடன் பஜ்ஜி பகோடா போன்ற திண்பண்டங்களை சாப்பிடுகிறீர்கள். தேநீருடன் உண்ணப்படும் காலை உணவு பெரும்பாலும் கடலை மவால் ஆனதாக இருக்கிறது. டீயுடன் கடலை மாவு சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. டீயுடன் கடலை மாவு பொருட்களை உட்கொள்வதால், ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறன் குறைவதால், உணவில் இருந்து பெறப்படும் ஊட்டச்சத்துக்களின் அளவும் குறைகிறது.
இரும்புச்சத்து நிறைந்த உணவை தேநீருடன் சாப்பிடக்கூடாது. அது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது கவனிக்கத்தக்கது. தேநீரில் ஆக்சலேட் மற்றும் டானின் உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். இவை இரண்டும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளிலிருந்து உடலில் உள்ள இரும்புச்சத்தை உறிஞ்சும் செயல்முறையில் தலையிடுகின்றன. பச்சை இலைக் காய்கறிகள், பருப்பு வகைகள், தானியங்கள் மற்றும் நட்ஸ் போன்ற இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை டீயுடன் சாப்பிடக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)