New Smartphones In November 2023: இந்தாண்டு நவம்பர் மாதத்தில் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் படங்கள் மட்டுமின்றி அசத்தலான சில ஸ்மார்ட்போன்களும் வரும் நவம்பர் மாதத்தில் வெளியாகிறது. அதுகுறித்து இங்கு காணலாம்.
வரும் நவம்பர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ள மொபைல்கள் குறித்து இந்த புகைப்படத்தில் முழுமையாக காணலாம்.
iQOO 12 Series: இதில் iQOO 12 மற்றும் iQOO 12 Pro என இரண்டு மாடல்கள் வருகின்றன. புதிய iQOO 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் நவம்பரில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சிறப்பம்சமாக 50MP+50MP+64MP டிரிபிள் கேமரா அமைப்பு, 24GB RAM மற்றும் 1TB இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகியவை டாப் வேரியண்டில் இருக்கும். அடிப்படை மாடல் விலை வரம்பில் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
Vivo Y78 5G: Vivo Y78 உலகளாவிய Vivo இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இருப்பினும், இது சில நாடுகளில் விற்பனையில் உள்ளது. ஆனால் இது இந்தியாவில் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. மேலும், இது நடப்பு அக்டோபரிலேயே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் Vivo இந்த மொபைலின் விற்பனையை நவம்பர் மாதத்திற்கு தள்ளிவைத்திருக்க வாய்ப்புள்ளது.
Lava Blaze 2: இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ள Lava Blaze 2 5ஜி ஸ்மார்ட்போன் குறித்து லாவா நிறுவனம் சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது. அந்த மொபைலின் வட்ட கேமரா வடிவமைப்பின் படத்தை மட்டுமே லாவா பகிர்ந்துள்ளது. இந்த மொபைலில் MediaTek Dimensity 6020, 5,000mAh பேட்டரி, 50MP AI கேமரா மற்றும் பல வசதிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Lava Blaze 2 5G நவம்பர் 2ஆம் தேதி அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Vivo X100 5G: Vivo சீன நிறுவனமான Vivo அதன் X90 தொடரின் வாரிசை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Vivo X100 மற்றும் Vivo X100 Pro ஆகியவை நவம்பர் 17ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாக சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் இதன் அறிமுகம் குறித்த வேறு எந்த விவரங்களையும் அந்நிறுவனம் அறிவிக்கவில்லை.
Xiaomi 14 Series: Xiaomi 14 சீரிஸின் Xiaomi 14 மற்றும் Xiaomi 14 Pro மொபைல்கள் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது. இந்த சீரிஸில் அக்டோபர் 26ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. சீனாவில் அறிமுகப்படுத்திவிட்ட நிலையில், இன்னும் சில வாரங்களுக்குப் பிறகு இந்த மொபைல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Xiaomi 14 தொடரின் ஆரம்ப விலை ரூ.50 ஆயிரம் என எதிர்பார்க்கப்படுகிறது.
OnePlus Ace 2 Pro: OnePlus நிறுவனம் அதன் Ace 2 Pro மொபைலை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் பரவியுள்ளது. இந்த சாதனம் ஏற்கனவே சீனாவில் அதிகபட்சமாக குறைந்தபட்சம் 12GB முதல் அதிகபட்சம் 24GB RAM மற்றும் குறைந்தபட்சம் 256GB முதல் 1TB வரை உள்ளடங்கிய ஸ்டோரேஜ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.