தினம் வெறும் வயிற்றில் ஊற வைத்த உலர்திராட்சை... உடலில் ஏற்படும் அதிசய மாற்றங்கள்

உலர் பழங்கள் அனைத்தும் பொதுவாகவே ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இவற்றை தொடர்ந்து உட்கொள்வதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். அந்த வகையில் ஊற வைத்த உலர் திராட்சையை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை அறிந்து கொள்ளலாம்.

உலர் திராட்சை, அனைவருக்கும் பிடித்த உலர் பழங்களில் ஒன்று. இதை பல வகைகளில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதில் திராட்சியை ஊறவைத்து அதனை நீருடன் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி ஆயுர்வேதத்தில் விளக்கப்பட்டுள்ளன.

 

1 /8

உலர் திராட்சை எண்ணற்ற ஊட்டச்சத்துக்களைக் கொண்டது. ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த உலர் திராட்சையில், கால்சியம் இரும்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. இந்நிலையில் ஊறவைத்த உலர் திராட்சையை காலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை விரிவாக அறிந்து கொள்ளலாம்.  

2 /8

செரிமான ஆரோக்கியம்: நம் வயிற்றில் உள்ள அமிலத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் உலர் திராட்சைக்கு உண்டு. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும். காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த உலர் திராட்சையை உட்கொள்வதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.  

3 /8

உடல் பருமன்: நார்ச்சத்து நிறைந்த உலர் திராட்சை, உடல் பருமனை குறைக்க உதவும். காலையில் வெறும் வயிற்றில் உலர் திராட்சையை ஊற வைத்த நீருடன் உட்கொள்வதால், தொப்பை கொழுப்பு கரைந்து, உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.

4 /8

இதய ஆரோக்கியம்: ஊற வைத்த திராட்சை நீரில் நிறைந்துள்ள பொட்டாசியம், இதயத்துடிப்பை சீராக்கி, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாரடைப்பு அபாயத்தை தடுக்கலாம்.  

5 /8

எலும்பு ஆரோக்கியம்: உலர் திராட்சையில் கால்சியம் சத்து நிறைந்துள்ளதால், எலும்பு ஆரோக்கியத்தை வளப்படுத்தும் திறன் கொண்டவை. எனவே தினமும் ஊறவைத்த உலர் திராட்சையை அதன் தண்ணீருடன் கொள்வது, மூட்டு வலி கீழ்வாதம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்.  

6 /8

நோய் எதிர்ப்பு சக்தி: உலர் திராட்சை நீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்களை எதிர்த்துப் போராடும் வலுவை உடலுக்கு அளிக்கிறது.நோய்களில் இருந்து உங்களை காத்துக் கொள்ள, தினம் காலையில் ஊற வைத்த உலர் திராட்சையை அதன் நீருடன் அருந்தவும்.  

7 /8

சோர்வை நீக்கும் உலர் திராட்சை: இரும்பு சத்து நிறைந்த உலர் திராட்சை, ரத்த ஓட்டத்தை அதிகரித்து ரத்த சோகையை போக்கி, உடலுக்கு ஆற்றலை அள்ளிக் கொடுக்கும். எனவே சோர்வு பலவீனம் நீங்க தினமும் காலையில் ஊற வைத்த உலர் திராட்சையை அதன் நீருடன் அருந்தவும்.  

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.