Omicron Food: ஓமிக்ரான் நோயால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு பல வித அறிகுறிகள் தென்படுகின்றன. இவற்றில் பசியின்மையும் ஒரு அறிகுறியாகும். மக்கள் எந்த உணவை உட்கொள்ள வேண்டும், எதை உட்கொள்ளக்கூடாது என்பது குறித்த குழப்பத்தில் இருக்கின்றனர். ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டால், தொண்டையில் கடுமையான வலி மற்றும் தொண்டையில் ஏதோ குத்துவது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. எதை குடித்தாலும், தொண்டையில் வலி இருக்கும். இந்த நிலையில், எந்தெந்த உணவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். தொண்டையில் வலி இருந்தாலும், இந்த உணவுகளால் உங்களுக்கு பிரச்சனை இருக்காது.
பச்சை காய்கறிகளை மற்றும் கீரை வகைகளை உட்கொள்வதும் உங்களுக்கு நன்மை பயக்கும். பசலைக்கீரை, முட்டைக்கோஸ், காலிபிளவர் ஆகியவற்றை மசித்து சாப்பிடவும். இது தவிர வெந்தயக் கீரையும் ஓமிக்ரான் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும். இது தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும்.
தொண்டை வலி மற்றும் பசியின்மை காரணமாக எதையும் சாப்பிட விருப்பம் இருக்காது. நீங்கள் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டிருந்தால், தயிர் சாப்பிடுவது உங்களுக்கு நல்லதாக அமையும். இதில் புரதச்சத்து அதிகம் இருக்கிறது. இதை விழுங்குவதிலும் உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது. வாழைப்பழத்தையும் தயிருடன் சேர்த்தும் சாப்பிடலாம். மென்மையான புரோபயாடிக்ஸ் உணவுகளை உட்கொள்வது உங்களுக்கு நன்மை பயக்கும்.
தொண்டை புண்ணுக்கு நிவாரணம் அளிக்கவும், ஊட்டமளிக்கவும் சூப் குடிக்கலாம். காய்கறிகளை சூப்பில் சேர்த்து சாப்பிடவும். இதனால் பலன் கிடைக்கும்.
ஓமிக்ரான் நோயாளிகள் லேசான உணவை சாப்பிடுவது முக்கியம். அடிக்கடி புரோட்டீன் ஷேக்கை எடுத்துக் கொள்ளலாம். தொண்டை வலி இருந்தால், பால் அல்லது தண்ணீரில் புரதப் பொடியைக் கலந்தும் குடிக்கலாம்.
ஓமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் தண்ணீர், பழச்சாறு என பலவித திரவங்களை உட்கொள்வது மிகவும் முக்கியமாகும். குறிப்பாக வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டால், எலக்ட்ரோலைட்டுகள் உள்ள பானத்தை குடிக்கவும். எலக்ட்ரோலைட்கள் அடங்கிய பானத்தை குடிப்பதன் மூலம், உடலில் சோடியத்தின் அளவும் சரியாக இருக்கும். எலெக்ட்ரல் பவுடரை எலக்ட்ரோலைட் பானம் வடிவில் உட்கொள்ளலாம். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)