SBI Gold monetisation scheme: சும்மா இருக்கும் தங்கத்தை வைத்து சூப்பரா சம்பாதிக்கலாம்!!

SBI Gold Monetisation Scheme: இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குனரான SBI அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்காக பலவித நலத்திட்டங்களைக் கொண்டு வருகிறது. அந்த வழியில், SBI அறிமுகப்படுத்திய ஒரு முக்கிய திட்டம்தான் தங்கத்தை பணமாக்கும் திட்டம்.

தங்கத்தை பணமாக்கும் (Gold Monetisation) SBI GMS திட்டம் மூலம், வாடிக்கையாளர்கள் வீட்டில் அல்லது வங்கியில் இருக்கும் தங்கத்திற்கு வட்டியை வருவாயாக பெற ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. 

1 /5

குறுகிய கால வங்கி வைப்பு (STBD) –  திட்டக்காலம் 1 முதல் 3 ஆண்டுகள் ஆகும் நடுத்தர கால அரசு வைப்பு (MTGD) - திட்டக்காலம் 5-7 ஆண்டுகள்.  நீண்ட கால அரசு வைப்பு (LTGD) திட்டக்காலம் 12-15 ஆண்டுகள்.

2 /5

குறைந்தபட்ச வைப்புத் தேவை 30 கிராம் (மொத்தம்), அதிகபட்ச அளவிற்கு வரம்பு இல்லை. தனிப்பட்ட நபர்களின் பெயரில் உள்ள டெபாசிட்டுகளுக்கு நியமன வசதியும் (Nomination Facility) கிடைக்கும்.   

3 /5

STBD-க்கு தற்போதுள்ள வட்டி விகிதங்கள் பின்வருமாறு: 1. 1 ஆண்டு காலத்திற்கு வட்டி விகிதம், 0.5 சதவீதமாகும். 2. 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரை வட்டி விகிதம் 0.55 சதவீதமாகும். 3. 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை வட்டி விகிதம் 0.60 சதவீதமாகும். STBD மீதான அசல் மற்றும் வட்டி தங்கத்தில் குறிப்பிடப்படும். திட்டம் முதிர்வடையும் போது புரோக்கன் காலத்திற்கான வட்டியும் செலுத்தப்படும். MTGD க்கு தற்போதைய வட்டி விகிதங்கள் 2.25 சதவீதமாக உள்ளன.  MTGD மற்றும் LTGD விஷயத்தில், அசல் தங்கத்தில் குறிப்பிடப்படும். இருப்பினும், வட்டி ஆண்டுதோறும் மார்ச் 31 அன்று இந்திய ரூபாயிலோ அல்லது முதிர்வுக்கான ஒட்டுமொத்த வட்டியாகவோ செலுத்தப்படும். திட்டம் முதிர்வடையும் போது புரோக்கன் காலத்திற்கான வட்டியும் செலுத்தப்படும்.

4 /5

டெபாசிட் செய்யப்படும் போது, தங்கத்தின் மதிப்பின் படி, ரூபாயில் வட்டி கணக்கிடப்படுகிறது. டெபாசிட்டர் அவரது விருப்பப்படி, ஆண்டுதோறும் எளிய வட்டியாகவோ அல்லது முதிர்ச்சியின் போது ஒட்டுமொத்த வட்டியாகவோ பெற்றுக்கொள்ளலாம். எந்த வகையை டெபாசிட்டர் தேர்வு செய்கிறார் என்பதை டெபாசிட் செய்யும் வேளையிலேயே அவர் தேர்வு செய்ய வேண்டும்.

5 /5

மிகவும் பழமையான பயன்படுத்தப்படாத நகைகளோ, தேவையான வருவாயை தர முடியாத நகைகளோ உங்களிடம் இருந்தால், அவற்றிற்கு இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என நிதித்துறை நிபுணர் ஜிதேந்திர சோலங்கி கூறினார். எனினும், தங்க காசுகளோ அல்லது தங்க பார்களோ, GMS திட்டத்தில் அதிக வருமானத்தை அளிக்காது என்றும் அவர் எச்சரித்தார். இந்தத் திட்டத்திற்கு ஒரு லாக்-இன் காலம் உள்ளது. எனவே பயன்படுத்தப்படாத தங்கம் வங்கியில் டெபாசிட் செய்யப்படும் காலத்தை ஒருவர் காரணியாகக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். பல கோடி மதிப்புள்ள தங்கத்தை அதிக அளவில் வைத்திருப்பவர்களுக்கு இந்த திட்டம் பெரும்பாலும் பொருந்தும் என்று அவர் கூறினார். அத்தகையவர்களுக்கு வட்டியில் வரும் வருமானம் இன்னும் அதிகமாக இருக்கும். தங்கமும் பாதுகாப்பாக இருக்கும்.