IPL Auction 2021: இந்த 5 வீரர்களுக்காக அணிகளுக்கிடையே சண்டை கூட வரலாம்!!

IPL 2021 Auction: IPL 2021 ஆம் ஆண்டிற்கான ஏலம் பிப்ரவரி நடுப்பகுதியில் நடைபெறும். ஒவ்வொரு அணியும் இந்த ஏலத்திற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். சில வீரர்களை வாங்குவது குறித்து அனைத்து அணியிகளின் உரிமையாளர்களும் மிகுந்த ஆர்வத்தைக் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் சில குறிப்பிட்ட வீரர்களின் ஏலங்கள் இந்த முறை அதிக சுவாரசியமாக இருக்கும் என கருதப்படுகின்றது. உரிமையாளர்கள் தங்கள் அணியில் சேர்த்துக்கொள்ளத் துடிக்கும் அப்படிப்பட்ட ஐந்து வீர்ரகளைப் பற்றி இங்கே காணலாம்.

1 /5

கிறிஸ் மோரிசுக்காக பல உரிமையாளர்களிடையே மோதல் ஏற்படலாம். மோரிஸின் முக்கியத்துவத்திற்கான காரணம் அவரது ஆல்ரவுண்ட் திறமைதான். அவர் 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசுவது மட்டுமல்லாமல், அதிரடியாக பேட் செய்யும் சக்தியும் கொண்டவர். ஏலத்தின்போது மோரிசுக்காக அணிகளின் உரிமையாளர்களிடையே சண்டை நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

2 /5

IPL 2020-ல் ஆஸ்திரேலியாவின் க்ளென் மேக்ஸ்வெல் தன்னிடம் எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு செயல்படவில்லை. அதனால்தான் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (KXIP) IPL 2021 ஏலத்திற்கு முன்பு அவரை விடுவித்தது. ஆஸ்திரேலியாவில் டீம் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களில் மேக்ஸ்வெல் பல அதிரடி இன்னிங்ஸ்களை விளையாடியதால், சில அணிகள் இவரை அதிக விலை கொடுத்தாவது ஏலத்தில் எடுக்க விரும்புகின்றன. அவரால் நன்றாக பந்து வீச முடியும் என்பதும் அவருக்கு ஒரு plus point!!

3 /5

அத்தனை சிறப்பாக விளையாடவில்லை. ஆனால் அவர் தனது சொந்த நாடான நியூசிலாந்திற்கு திரும்பியவுடன்,​மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான வரையறுக்கப்பட்ட ஓவர் தொடரில் ஒரு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் தேவைப்படும் அணி நிச்சயமாக இந்த வீரரை வாங்க விரும்பும்.

4 /5

2013 ஆம் ஆண்டில் ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்சிங் செய்ததற்காக எஸ்.ஸ்ரீசாந்திற்கு 7 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இப்போது அவர் மீண்டும் இந்த மெகா டி 20 லீக்கிற்கு திரும்பத் தயாராக உள்ளார். சையத் முஷ்டாக் அலி டிராபி 2021 இல் கேரளா அணிக்காக விளையாடிய அவர் சிறப்பாக விளையாடியுள்ளார். IPL-ல் அவர் 40 போட்டிகளில் 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சில குழுக்கள் தங்கள் அணியில் இவரை சேர்க்க விரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அவரது அனுபவம் அணிக்கு பலத்தை அளிக்கும். ஸ்ரீசாந்த் IPL-ல் விளையாடுவதற்கான விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

5 /5

IPL 2021 ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்துக்கு அதிக அளவு டிமாண்ட் இருக்கக்கூடும். இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெளியிட்டது. RCB உட்பட பல அணிகளுக்கு நல்ல ஓப்பனரின் தேவை உள்ளது. ஆகையால் இவரை வாங்கவும் அணி உரிமையாளர்களுக்கு இடையே நல்ல போட்டி இருக்கக்கூடும்.

You May Like

Sponsored by Taboola