Celebs Income On Social Media: சாதாரண மனிதர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்கள். சமீபத்திய விவசாயிகள் போராட்டத்திற்குப் பிறகு, சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. அனைவரும் சோஷியல் மீடியா மூலம் தங்கள் கருத்துகளை முன்வைத்து வருகிறார்கள்.
பிரபலங்கள் ரசிகர்களுடன் பேசவும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்துகின்றனர். இது மட்டுமல்லாமல், அவர்கள் பல பிராண்டுகளை சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்துகிறார்கள். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, சமூக ஊடகம் வாயிலாக பிரபலங்கள் பல கோடிகளை சம்பாதிக்கிறார்கள்.
பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை பட்டையைக் கிளப்பும் பிரியங்கா சோப்ரா, பிராண்ட் விளம்பரம் செய்ய, ஒரு பதிவுக்கு 1.80 கோடி வரை வசூலிக்கிறார் என்று எங்கள் இணை வலைத்தளமான ஜீ நியூஸ் தெரிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல், ஃபோர்ப்ஸ் பிரியங்காவை பணக்கார இன்ஸ்டாகிராமராக அறிவித்துள்ளது. இன்ஸ்டாகிராம் பணக்கார பட்டியலில் 2 இந்திய பிரபலங்கள் மட்டுமே உள்ளனர். அவர்கள் பிரியங்கா சோப்ரா மற்றும் விராட் கோலி!!
பிரியங்கா சோப்ராவுக்குப் பிறகு, சமூக ஊடகங்கள் மூலம் அதிக பணம் ஈட்டும் இரண்டாவது இந்தியராக உள்ளவர் விராட் கோலி. சோஷியல் மீடியாவில் அவருக்கு மிகப்பெரிய ஃபான் ஃபாலோயிங் உள்ளது. விராட் இன்ஸ்டாகிராமில் 94.6 மில்லியன் ஃபாலோயர்சைக் கொண்டிருக்கிறார். இதனால் விராட்டிடமிருந்து விளம்பரம் செய்யும் பதிவுகளைப் பெறுவதற்கு அவருக்கு 1.35 கோடி கட்டணம் வழங்கப்படுகிறது.
சமூக ஊடகங்களில் ஆலியா பட்டுக்கும் அதிக அளவு ரசிகர்கள் உள்ளனர். ஆலியா இன்ஸ்டாகிராமில் 42 மில்லியன் ஃபாலோயர்ஸ்களைக் கொண்டுள்ளார். அவரது ஒரு இடுகைக்கு ரூ .1 கோடி வசூலிக்கிறார். பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஆலியாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய திரைத்துறையில் அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரங்களில் ஒருவரான பாலிவுட் மன்னர் ஷாருக்கானுக்கு தனது இன்ஸ்டாகிராமில் 24.1 மில்லியன் ஃபாலோயர்ஸ் உள்ளனர். ஷாருக் தனது பதிவுகளுக்கு 80 லட்சம் முதல் 1 கோடி வரை வசூலிக்கிறார்.
சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் அமிதாப் பச்சனுக்கு இன்ஸ்டாகிராமில் 24.8 மில்லியன் ஃபாலோயர்ஸ் உள்ளனர். தகவல்களின்படி, அமிதாப் தனது ஒரு இடுகைக்கு 40-50 லட்சம் வசூலிக்கிறார்.