Post Office அளிக்கும் டாப் 5 சேமிப்புத் திட்டங்கள்: சேமித்து பயன் பெறுவீர்

இந்தியா போஸ்டைப் பற்றி நாம் நினைக்கும் போது, ​​முதலில் நம் மனதில் தோன்றும் விஷயம் போஸ்ட்மேன் மற்றும் இந்திய தபால் துறை வழங்கும் பார்சல் சேவைகள்தான். இந்தியா போஸ்ட் வழங்கும் பிற சேவைகளைப் பற்றி சிலருக்குத்தான் தெரியும். பெரும்பாலானவர்கள் அது வழங்கும் நிதிச் சேவைகளைப் பற்றி அறியாமல் இருக்கிறார்கள். இந்தியா போஸ்ட், தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களின் கீழ் பணத்தை சேமிக்க பல திட்டங்களை வழங்குகிறது.

இந்த திட்டங்களை உங்கள் அருகிலுள்ள தபால் அலுவலகம் அல்லது வங்கிக்கு சென்று ரூ .1,000 க்கும் குறைவான தொகையிலும் திறக்க முடியும். சமீபத்தில், தபால் அலுவலக சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்சம் ரூ .500 டெபாசிட் செய்வது கட்டாயமாகியுள்ளது. தற்போது, ​​இந்தியா போஸ்ட் 9 சேமிப்பு திட்டங்களை வழங்குகிறது. இந்தியா போஸ்ட் வழங்கும் சில முக்கியமான சேமிப்பு திட்டங்களை இங்கே காணலாம்.

1 /5

இது இந்தியா போஸ்ட் வழங்கும் மிகவும் பிரபலமான வரி திட்டங்களில் ஒன்றாகும். இது ஒரு நீண்ட கால சேமிப்புத் திட்டமாகும். இது 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடைகிறது. இருப்பினும், இந்த திட்டத்தின் முதலீட்டாளர்கள் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஓரளவு தொகையை திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறார்கள். கணக்கு செயலில் இருப்பதை உறுதிசெய்ய ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 500 ரூபாய் வைப்புத்தொகை தேவைப்படும். இது தற்போது ஆண்டுக்கு 7.1% வட்டி விகிதத்தை வழங்குகிறது (ஆண்டுக்கு ஆண்டு கூட்டு). தபால் அலுவலகம் அல்லது ஏதாவது ஒரு வங்கியில் நாடு முழுவதும் ஒரே ஒரு கணக்கை மட்டுமே திறக்க முடியும். வைப்புத்தொகையை மொத்தமாக அல்லது தவணைகளில் செலுத்தலாம். படம்: ராய்ட்டர்ஸ்

2 /5

இந்த திட்டம் மூத்த குடிமக்களுக்கு மட்டுமே. 60 வயதை எட்டியவர்கள் மூத்த குடிமகன் சேமிப்பு திட்டத்தில் தங்கள் வாழ்நாளில் 15 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். இது உங்களுக்கு வழக்கமான வட்டி வருமானத்தைத் தருகிறது. மேலும் 5 வருட லாக்-இன் காலத்துடன் வருகிறது. மூத்த குடிமக்கள் திட்டம் ஆண்டுக்கு 7.4% வட்டி அளிக்கிறது. மார்ச் 31/30 செப்டம்பர் / டிசம்பர் 31 ஆம் தேதி முதல் இது செலுத்தப்பட வேண்டும். அதன்பிறகு மார்ச் 31, ஜூன் 30, செப்டம்பர் 30 மற்றும் டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் வட்டி செலுத்தப்படும். ஆதாரம்: பி.டி.ஐ.  

3 /5

கிசான் விகாஸ் பத்ரா (KVP) 124 மாதங்களில் முதிர்ச்சியடையும் அல்லது இரட்டிப்பாகும். 6.9% என்ற விகிதத்தில் இந்த திட்டத்தில் வட்டி வழங்கப்படுகிறது. இந்த கணக்கைத் தொடங்க குறைந்தபட்சம் ரூ. 1000 தேவை. ரூ .100- ன் மடங்காக முதலீடு செய்ய வேண்டும். முதலீடு செய்ய அதிகபட்ச வரம்பு இல்லை. Source: Pixabay

4 /5

இந்த முதலீட்டு கருவி பெண் குழந்தைகளுக்கு மிகவும் பொருத்தமானது. உங்கள் பெண் குழந்தைக்கான முதலீட்டை நீங்கள் பூர்த்தி செய்ய விரும்பினால், இது மிகவும் பிரபலமான பெண் குழந்தை சேமிப்பு திட்டங்களில் ஒன்றாகும். இது உங்களுக்கு 7.6% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இரண்டு மகள்களுக்கு தனித்தனியாக ஒரு வீட்டிற்கு அதிகபட்சம் இரண்டு கணக்குகள் அனுமதிக்கப்படுகின்றன. குழந்தை 21 வயதை அடைந்ததும், முதிர்வுத் தொகையை கோர அவள் தகுதியுடையவள் ஆகிறாள். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ .250 மற்றும் அதிகபட்சம் ரூ .1,50,000 முதலீடு செய்யலாம். மொத்த தொகையில் முதலீடு செய்ய முடியும். ஒரு மாதத்தில் அல்லது நிதியாண்டில் வைப்புகளின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை. ஆதாரம்: பி.டி.ஐ.

5 /5

தேசிய சேமிப்பு சான்றிதழ் 5 வருடங்கள் லாக்-இன் காலத்தைக் கொண்டுள்ளது. ஆண்டுதோறும் 6.8% கூட்டு வட்டியை அளிக்கிறது. ஆனால் இது மெச்யூரிடியின் போது அளிக்கப்படும். இந்த அகௌண்டை திறக்க குறைந்தபட்சம் ரூ 1000 டெபாசிட் செய்ய வேண்டும். மீண்டும் முதலீடு செய்ய அதிகபட்ச வரம்பு இல்லை. ஆதாரம்: பி.டி.ஐ.