Ponniyen Selvan Rajarajan: மாமன்னர் ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழாவை ஒட்டி அவரது திருவுருவ சிலைக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்,
மாமன்னர் ராஜராஜ சோழன் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் அன்று சதய விழா தஞ்சாவூரில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது,
ராஜா அருண்மொழி தேவர் கட்டிய பெரிய கோவிலின் சதயத் திருநாள் பெருவிழா இன்று. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று தஞ்சாவூர் பெரிய கோவிலில் இருந்து திருமுறைகள் பாடப்பட்டு மங்கள வாத்தியங்கள்,கைலாய வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்து மாமனார் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
பொன்னியின் செல்வன் என்று புகழ்பெற்றவர் சக்ரவர்த்தி ராஜராஜ சோழன்.மாமன்னர் ராஜராஜ சோழனால் பாதுகாக்கப்பட்ட திருமுறைகள் கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டு ராஜ வீதிகளில் யானை மீது ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
பெரியநாயகி மற்றும் பெருவுடையாருக்கு பேராபிஷேகங்கள் நடைபெறுகின்றன
சதய விழா கொண்டாடப்படுவதால் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை தினமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது .