300 ஸ்லாம் வெற்றிகள் பெற்று சாதனை படைத்த டென்னிஸ் வீரர் ரஃபேல் நடாலின் சிறந்த போட்டிகள்

ரஃபா நடால் புதன்கிழமை (மே 25) பிரெஞ்சு ஓபன் 2022 இன் மூன்றாவது சுற்றுக்கு நேர் செட்களில் கோரெண்டின் மவுடெட்டை வென்றார். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் நடால் பெற்ற 300வது வெற்றி இதுவாகும்.

டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் நடாலின் சில சிறந்த சாதனைகள் இவை...

  • May 26, 2022, 10:17 AM IST
1 /6

ரோஜர் பெடரர் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகியோருக்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 300 போட்டிகளில் வெற்றி பெற்ற மூன்றாவது வீரர் ரஃபா நடால் ஆவார். பெடரர் 369 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார், ஜோகோவிச் 325 வெற்றிகளைப் பெற்றுள்ளார். (Source: Twitter)

2 /6

ரஃபா நடால் கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிகளில் (72%) 21-8 என்ற கணக்கில் உள்ளார். பெடரரும் ஜோகோவிச்சும் முக்கிய இறுதிப் போட்டிகளில் (65%) என ஒரே மாதிரியான 20-11 சாதனைகளைக் கொண்டுள்ளனர். (Source: Twitter)

3 /6

மூன்று வெவ்வேறு தசாப்தங்களில் பல கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் ரஃபேல் நடால் ஆவார்.  (Source: Twitter)

4 /6

ரஃபா நடால் இரட்டை கேரியர் ஸ்லாம் பெற்றுள்ளார், நான்கு மேஜர்களில் ஒவ்வொன்றையும் குறைந்தது இரண்டு முறையாவது வென்றது இரட்டை கேரியர் ஸ்லாம் எனப்படும். ராய் எமர்சன், ராட் லேவர், நோவக் ஜோகோவிச் (ஓபன் எரா) ஆகியோருக்குப் பிறகு, டென்னிஸ் வரலாற்றில் இதைச் செய்த நான்காவது மனிதர் ரஃபேல் நடால் மட்டுமே. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 300 போட்டிகளில் வெற்றி பெற்ற மூன்றாவது வீரர் ரஃபா நடால் என்பதும் குறிப்பிடத்தக்கது. (Source: Twitter)

5 /6

ரஃபேல் நடால் பிரெஞ்ச் ஓபனில் 107 போட்டிகளில் வெற்றி பெற்று மூன்றில் தோல்வி அடைந்துள்ளார். இதில் சாதனைப் பதிவுகளும் செய்துள்ளார்.   (Source: Twitter)

6 /6

பிரெஞ்சு ஓபனில் ரஃபா நடால் தொடர்ந்து 18 முறை முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார். முதல் சுற்று ஆட்டத்தில் நடால் தோற்றதில்லை. (Source: Twitter)