ராகுவின் மிகப்பெரிய மாற்றம்: கொண்டாட்டம், மகிழ்ச்சி இந்த ராசிகளுக்கு

Rahu Nakshatra Peyarchi: ராகுவின் நட்சத்திர மாற்றம் அனைத்து 12 ராசிகளுக்கும் தொழில், வேலை, வருமானம், ஆரோக்கியம் மற்றும் காதல் வாழ்க்கை போன்றவற்றில் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்தும். 

ஜோதிட சாஸ்திரத்தில் ராகுவை நிழல் கிரகம் என்றும் பாவ கிரகம் என்றும் கூறுவார்கள். ராகுவின் நட்சத்திர மாற்றம் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 2025 ஆம் ஆண்டு ராகு பெயர்ச்சி அடையப் போகிறார், ஆனால் அதற்கு முன்னதாக ஆண்டின் தொடக்கத்தில் ராகு நட்சத்திர மாற்றம் இருக்கும், இதன் காரணமாக 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜொலிக்கும்.

1 /6

ராகு மற்றும் கேது ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை ராசியை மாற்றும். அதன்படி இப்போது ராகு நட்சத்திர மாற்றம் மார்ச் 2025 இல் பெயர்ச்சியாகிறது.

2 /6

ராகு நட்சத்திர மாற்றம் பூரம் நட்சத்திரத்தில் நடக்கும். ராகு மார்ச் 16, 2025 அன்று மாலை 6:50 மணிக்கு பூரம் நட்சத்திரத்தில் நுழைகிறார். ராகுவின் நிலை மாற்றம் 12 ராசிகளையும் பாதிக்கும். இதில் 3 ராசிக்காரர்களுக்கு ராகுவால் சாதகமான பலன் கிடைக்கும்.

3 /6

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பலன்களைத் தரும். எதிர்பாராத நிதி ஆதாயம் கிடைக்கும். நிதி நிலையில் பெரிய முன்னேற்றத்தைக் காணலாம். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். புதிய சொத்து வாங்குவீர்கள்.

4 /6

மிதுன ராசிக்காரர்களுக்கு மிகுந்த பலன்களைத் தரும். தொழிலில் கவனம் செலுத்தினால், வெற்றி கிடைக்கும். புதிய வேலைக்கான தேடல் முடிவடையும். வெளிநாட்டில் தொழில் செய்பவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.

5 /6

துலாம் ராசிக்காரர்களுக்கு லாட்டரி அடிக்கும். தொழிலில் சிறந்த வெற்றியைப் பெறுவீர்கள். ஒன்றன் பின் ஒன்றாக பல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். அதிர்ஷ்டம் ஆதரிக்கும். வாழ்க்கையில் இருந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.

6 /6

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.