வேட்டையன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது? எந்த தளத்தில் வெளியாகிறது?

Vettaiyan OTT Release: ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் நடித்த வேட்டையன் படம் எந்த ஓடிடி தளத்தில், எந்த தேதியில் வெளியாகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

 

1 /6

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி வெளியான வேட்டையன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்போது ஓடிடி தளத்தில் வெளியாக தயாராக உள்ளது.  

2 /6

அமேசான் பிரைம் வீடியோ வேட்டையனின் டிஜிட்டல் உரிமையை ரூ. 90 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   

3 /6

தீபாவளிக்கு படம் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு வாரம் கழித்து நவம்பர் 7ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் படம் வெளியாக உள்ளது.   

4 /6

இது குறித்து இன்னும் அமேசான் தரப்பில் இருந்து எந்தஒரு அதிகார்வப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இன்னும் சில திரையரங்குகளில் படம் ஓடி கொண்டிருக்கிறது.  

5 /6

வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.  

6 /6

எந்திரன் 2.0, தர்பார்,லால் சலாம் படத்தை தொடர்ந்து ரஜினி நடிப்பில் உருவான வேட்டையன் படத்தையும் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.