துலீப் டிராபி அணியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ள ரவீந்திர ஜடேஜா?

டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ஜடேஜா டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்தவுள்ளார். இருப்பினும் ஐபிஎல்லில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

1 /6

2024ம் ஆண்டுக்கான துலீப் டிராபி தொடர் செப்டம்பர் 5 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஆண்டு துலீப் டிராபி அதிக எதிர்பார்ப்பில் உள்ளது, காரணம் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் பலர் இதில் விளையாட உள்ளனர்.  

2 /6

இதற்கான அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், பிசிசிஐ அதில் சில மாற்றங்களை தற்போது செய்துள்ளது. அபிமன்யு ஈஸ்வரன் கேப்டனாக இருக்கும் பி அணியில் இருந்த ஜடேஜா தற்போது நீக்கப்பட்டுள்ளார்.  

3 /6

துலீப் டிராபி அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜா நீக்கப்பட்டதற்கான காரணம் எதையும் பிசிசிஐ தெரிவிக்கவில்லை. பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெற உள்ள நிலையில் பணி சுமை காரணமாக நீக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.   

4 /6

இருப்பினும் ஜடேஜாவுக்கு மாற்றாக பிசிசிஐ எந்த வீரரையும் குறிப்பிடவில்லை. டி20 உலக கோப்பையில் பிறகு ஓய்வை அறிவித்த ஜடேஜா அதன் பிறகு இந்திய அணியில் இடம் பெறவில்லை.  

5 /6

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜடேஜா இடம் பெறவில்லை. அடுத்தடுத்து போட்டிகள் வர உள்ளதால் அவருக்கு ஓய்வு கொடுத்துள்ளோம் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்படுகிறது.   

6 /6

மேலும் உடல்நலக்குறைவு காரணமாக துலீப் டிராபி அணியில் இருந்து முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதில் நவ்தீப் சைனி மற்றும் கவுரவ் யாதவ் இடம் பிடித்துள்ளனர்.