நகைக்கடன் பெறுவதில் இனி சிக்கல்: ஆப்பு வைத்த ஆர்பிஐ, விவரம் இதோ

Gold Loan: நகைக்கடன் பெறும் திட்டம் உள்ளதா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நகைக்கடன்கள் தொடர்பாக தற்போது இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. 

Gold Loan: நகைக்கடன்களை பொறுத்த வரையில், ஆர்பிஐ (RBI) தனது பிடியை இறுக்கியுள்ளது. குறிப்பாக, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) மீதான கண்காணிப்பை மத்திய வங்கி அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் கடுமையான நடவடிக்கைகளால் நகைக்கடன் பெறுபவர்கள் மீது ஏற்படக்கூடும் தாக்கம் என்ன? கடன் வட்டி அதிகரிக்குமா? கடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுமா? இவற்றை பற்றி விரிவாக இங்கே காணலாம். 

1 /8

NBFC கள் தங்கக் கடன் வழங்கும் போது வங்கியின் அனைத்து விதிகளையும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று RBI விரும்புகிறது. ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸ் விதிகளை மீறியதால், அந்த நிறுவனம் நகைக்கடன் வழங்குவதை மார்ச் மாதம் ரிசர்வ் வங்கி தடை செய்தது.

2 /8

ஆர்பிஐ -இன் கண்டிப்பு காரணமாக, சாமானியர்கள் தங்கக் கடன் பெறுவதில் சில சிரமங்களைச் சந்திக்க நேரிடும். மேலும் இது NBFCகளின் வணிகத்திலும் மோசமான விளைவை ஏற்படுத்தலாம்.

3 /8

நகைக்கடன் வழங்குவதில் NBFCகள் விதிமுறைகளை மீறுவதாக இந்திய ரிசர்வ் வங்கிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அடகு வைக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடனாக வழங்க முடியும் என்று ரிசர்வ் வங்கி விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால், பல வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமான கடன் தொகையை வழங்குகின்றன. 

4 /8

மேலும், கடன் தொகையை வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் செலுத்தாமல் பணமாகவே வழங்கப்பட்டு வருகிறது. 20,000 ரூபாய்க்கும் அதிகமான கடன் தொகையை கடனாளியின் வங்கிக் கணக்கில்தான் டெபாசிட் செய்ய வேண்டும் என NBFC களிடம் RBI இப்போது கூறியுள்ளது.

5 /8

இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த கண்டிப்பான நடவடிக்கையால் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் தங்கக் கடன் போர்ட்ஃபோலியோவில் மிகவும் எதிர்மறையான தாக்கம் ஏற்படும். NBFC கள் வழங்கும் உடனடி கடன்களால் நகைக் கடன் வணிகம் வளர்ந்து வந்தது. இந்தத் தடையின் காரணமாக, NBFCகளின் தங்கக் கடன்கள் மீதான கவர்ச்சி இனி குறையும். இரண்டாவதாக, NBFCகள் வங்கிகளை விட தங்கத்தின் மீது அதிக கடன் தொகையை வழங்குகின்றன. ரிசர்வ் வங்கியின் கண்டிப்பால் இனி தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடனாக வழங்க முடியும். இது நகைக் கடன்களின் எண்ணிக்கையை பாதிக்கும். 

6 /8

நகைக்கடன் வாங்கும் வாடிக்கையாளர்களும் இதனால் பாதிக்கப்படுவார்கள். இனி அவர்களுக்கு தங்க நகைகள் மீது முன்பை விட குறைவான கடனே கிடைக்கும். இது தவிர, நகைக் கடன்கள் குறித்த ரிசர்வ் வங்கியின் கண்டிப்பால், ஆவண சரிபார்ப்புகளும் இனி அதிகரிக்கும். இதன் காரணமாக முன்பை விட கடன் கிடைக்க அதிக காலம் எடுக்கும் வாய்ப்பும் உள்ளது.

7 /8

கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, NBFC களின் தங்கக் கடன் வணிகத்தில் பெரும் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வணிகம் சுமார் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. கொரோனா காலத்தில், NBFC களுக்கு நகைக் கடன் வழங்குவதில் ரிசர்வ் வங்கி சில தளர்வுகளை வழங்கியது. அந்த நேரத்தில், NBFC கள் அடகு வைக்கப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பில் 90 சதவீதம் வரை கடன் கொடுக்கலாம் என்ற வசதி இருந்தது. 

8 /8

மக்களுக்கு பல்வேறு காரணங்களுக்காக பணம் தேவைப்படுகின்றது. இதற்காக வங்கிகள் மற்று, வங்கி சாரா அமைப்புகளில் கடன் பெறுகிறார்கள். இதில் தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. 2020 நிதியாண்டில், NBFCகளின் நகைக் கடன் வணிகம் ரூ.35,000 கோடியாக இருந்தது. 2023ஆம் நிதியாண்டில் இது ரூ.1,31,000 கோடியாக உயர்ந்துள்ளது.