சனி நட்சத்திர பெயர்ச்சி.. பணம், அதிர்ஷ்டம், பொற்காலம் இந்த ராசிகளுக்கு

Saturn Nakshatra Peyarchi: கடந்த 19 ஆம் தேதி சனி பகவான் தனது நட்சத்திரத்தை மாற்றினார். குருவின் நட்சத்திரமான பூரட்டாதியில் பெயர்ச்சியடைந்துள்ளார். இதனால் எந்த ராசிகளுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.

வேத ஜோதிடத்தில் சனி பகவான் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாகும். ஒருவரது கர்ம வினைக்கு ஏற்ப பலனை அளிக்கும் சனி பகவான் ஒரு ராசியில் சுமார் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். தற்போது சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி சமீபத்தில் நிகழந்துள்ளது.

1 /7

சனி பகவான் சமீபத்தில் தனது நட்சத்திரத்தை மாற்றி உள்ளார். குருவின் அதிபதி நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் வக்ர நிலையில் நகர்ந்து பூரட்டாதி நட்சத்திரத்தின் முதலாம் பாதத்தில் ஆகஸ்ட் 19 பெயர்ச்சி அடைந்துள்ளார். இது எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம், புகழ், பதவி, அதிர்ஷ்ட பொற்காலத்தை தரும் என்று பார்ப்போம்.

2 /7

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சி சிறப்பு பலன்களை தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றி பெறும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள்.

3 /7

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சி சாதகமான பலனைத் தரும். வியாபாரத்தில் லாபம் பெருகும். பழைய முதலீட்டால் நிதி நிலை மேம்படும். வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

4 /7

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சி நன்மையான பலனைத் தரும். செல்வம் பெருகும். தாயின் உடல்நிலை சீராகும். நல்ல செய்திகளைப் பெறலாம். மூதலீடு செய்வதன் மூலம் லாபம் ஈட்டலாம்.   

5 /7

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை தரும். பதவி உயர்வு கிடைக்கலாம். தொழிலில் நிதி ஆதாயம் உண்டாகும். பணப் பிரச்சனை தீர்வுக்கு வரும். சொத்து, செல்வம் பெருகலாம்.

6 /7

சனி பகவானின் அருள் பெற, சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகியவற்றை கூறலாம். ஏழை எளியவர்களுக்கு உதவுபவர்களை சனிபகவான் எப்போதும் தொந்தரவு செய்ய மாட்டார். ஆகையால் நம்மால் ஆனவரை நலிந்தோருக்கு உதவுவது நல்லது.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.