சனி பெயர்ச்சி.. மகா பொற்காலம், ராஜ அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு

Shani Nakshatra Parivartan 2024: கடந்த ஆவணி அவிட்டம் நாளில், சனி கிரகம் முதல் பாதத்தில் நுழைந்து பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்தார். அக்டோபர் 3, 2024 வரை சனி இந்த நட்சத்திரத்தில் தான் பயணிப்பார். இது 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.

நீதி கடவுள் என்று அழைக்கப்படும் சனி நாம் செய்யும் செயலுக்கு ஏற்ப பலன்களை அள்ளித் தருவார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய சனி அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனிபகவான் தற்போது நட்சத்திர மாற்றம் எந்த ராசிகளுக்கு சிறப்பான பலனைத் தரும்.

1 /7

வேத ஜோதிடத்தின்படி, நீதியின் கடவுளான சனி, 2024 ஆகஸ்ட் 19 அன்று அதாவது ஆவணி அவிட்டம் நாளில் பூரட்டாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்த்தில் பெயர்ச்சி அடைந்தார். சனியின் இந்த ராசி மாற்றம் மிகவும் முக்கியமானது.   

2 /7

அக்டோபர் 3, 2024 வரை சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் இருப்பார். இது 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். இவர்கள் தொழில் முன்னேற்றத்தையும் ஏராளமான செல்வத்தையும் பெறுவார்கள். இந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.

3 /7

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர மாற்றம் மிகவும் சாதகமாக இருக்கும். தொழிலில் பெரும் முன்னேற்றத்தை தரும். தொழில், வியாபாரத்தில் லாபம் ஈட்டலாம். பெரிய ஆர்டர்களைப் பெறலாம். வருமானம் அதிகரிக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். 

4 /7

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் தரும். வேலையில் அதிர்ஷ்டம் உண்டாகும். வெற்றியைப் பெறுவீர்கள். வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லலாம். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தொழிலில் பலம் பெறும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.

5 /7

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு மிகுந்த பலன்களைத் தரும். கூட்டு தொழிலில் லாபம் ஈட்டுவீர்கள். நிதி ஆதாயம் உண்டாகும். திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும். அதேசமயம் திருமணம் நடைபெறும்.

6 /7

சனி பகவானின் அருள் பெற, சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகியவற்றை கூறலாம். ஏழை எளியவர்களுக்கு உதவுபவர்களை சனிபகவான் எப்போதும் தொந்தரவு செய்ய மாட்டார். ஆகையால் நம்மால் ஆனவரை நலிந்தோருக்கு உதவுவது நல்லது.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.