கூகுள் பே-ல் அனுப்பிய பணம் வரவில்லையா? உடனே இத பண்ணுங்க!

கூகுள் பே செயலி மூலம் செய்யப்படும் டிரான்ஸாக்ஷன்களில் ஏதேனும் தவறு நடந்துவிட்டால் அந்த பணத்தை ரீ-ஃபண்ட் செய்ய பின்வரும் முறைகளை பின்பற்ற வேண்டும்.

 

1 /4

கூகுள் பே மேல் வலது மூலையில் உள்ள ப்ரொபைல் பிக்சரை க்ளிக் செய்து, செட்டிங்ஸ் ஆப்ஷனிற்கு செல்ல வேண்டும். அதன் பின்னர் செட்டிங்ஸ் ஆப்ஷனில் உள்ள ஹெல்ப் மற்றும் ஃபீட்பேக் ஆப்ஷனை நீங்கள் தேர்வு செய்யவேண்டும்.  

2 /4

இப்போது கான்டக்ட் சப்போர்ட் பகுதிக்கு சென்று, எங்களை தொடர்புகொள்ளவும் என்கிற பக்கத்திற்கு சென்று உங்கள் புகார்களை தெரிவிக்க வேண்டும்.  

3 /4

அடுத்த பக்கத்தில் உள்ள சாட் ஆப்ஷனை தேர்வுசெய்து, பெயர் போன்ற விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.  அதன் பின் கஸ்டமர் கேர் அதிகாரியுடன் உங்களுக்கு தொடர்பு ஏற்படுத்தப்படும், இப்போது நீங்கள் மெசேஜ் அனுப்ப வேண்டும்.  

4 /4

டிரான்ஸாக்ஷன் செய்யப்பட்ட தேதியிலிருந்து 7 நாட்களுக்குப் பிறகு நீங்கள் பணத்தைத் திரும்பப் பெறவில்லை என்றால் மட்டுமே கூகுள் பே வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்ள வேண்டும்.