சுக்கிர பெயர்ச்சி 2023: மாளவ்ய ராஜயோகத்தால் பண மழையில் குளிக்கப்போகும் 4 ராசிகள்

Venus Transit 2023:  2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதியன்று, மீன ராசியில் பிரவேசிக்கும் சுக்கிரன் மாளவ்ய ராஜயோகத்தை ஏற்படுத்துகிறார். சுக்கிரனின் பெயர்ச்சியால் உருவாகும் யோகம் பலரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை உருவாக்கும்.

மாளவ்ய ராஜயோகம், பஞ்சமஹாபுருஷ ராஜயோகங்களில் ஒன்றாகும். ஒருவரின் ஜாதகத்தில் லக்னம் மற்றும் சந்திரன் முதல் 1, 4, 7 மற்றும் 10 ஆம் வீட்டில் ரிஷபம், துலாம் அல்லது மீனம் ஆகிய இடங்களில் சுக்கிரன் அமைந்திருந்தால், இந்த ராஜயோகம் உருவாகும்.

1 /6

பிப்ரவரி மாதம் நிகழவுள்ள சுக்கிரன் பெயர்ச்சி அனைவரின் வாழ்க்கையிலும் மாற்றங்களை கொண்டு வரும். சுக்கிரன் மீன ராசியில் நுழைவதால் மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது.

2 /6

பிப்ரவரி 15ல் உருவாகும் இந்த ராஜயோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்

3 /6

விடாமுயற்சி மற்றும் உந்துதல் கொண்ட பூர்வீகரிஷப ராசிக்காரர்களுக்கு, மாளவ்ய யோகத்தால் தொழிலில் முன்னேற்றமும், லாபமும் ஏற்படும். வேலையில் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்!

4 /6

சுக்கிரனின் சஞ்சாரத்தால் ஏற்பட்ட மாளவ்ய யோகம், தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். திருமணம் செய்ய விரும்புபவர்களுக்கு இது உகந்த நேரம் இருக்கும். ஆளுமை அதிகரிக்கும், துணிச்சலுடனும் தைரியத்துடனும் செயல்பட வைக்கும் சுக்கிரனின் மாளவ்ய யோகம் இது.

5 /6

மாளவ்ய யோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நிம்மதியைக் கொடுக்கும். சிம்ம ராசிக்காரர்களுக்கான சவால்கள் அனைத்தும் மாளவ்ய யோகத்தால் சரியாகிவிடும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கும். வாகனம் அல்லது புதிய சொத்து வாங்க விரும்புபவர்களுக்கு இது உகந்த நேரம்.  

6 /6

சனியின் ஆட்சியில் இருக்கும் கும்ப ராசியினருக்கு மாளவ்ய யோகம் நிம்மதியைக் கொடுக்கும்.  நிதி ஆதாயங்கள், பொருளாதார முன்னேற்றம் என வாழ்க்கை களைகட்டும். தொழிலிலும் அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கும்.