SIP: மாதம் ரூ. 5000 முதலீடு போதும்... அதனை ஒரு கோடியாக மாற்றும் மேஜிக் பார்முலா..!!

SIP Investment Tips: காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை, எனவே எதிர்காலம் சிறப்பாக இருக்க, நிகழ்காலத்தில் திட்டமிட்டு முன்னேற வேண்டும். முதுமையில் ஏற்படும் பிரச்சனைகளை, குறிப்பாக நிதி ரீதியாக, பிரச்சனைகளை தவிர்க்க அனைவரும் சரியான நேரத்தில் திட்டமிட வேண்டும். 

துரித கதியிலான வாழ்க்கையில், எல்லோரும் பணக்காரர்களாக மாற விரும்புகிறார்கள். ஒவ்வொருவரின் குறிக்கோளும் கோடீஸ்வரர் ஆக வேண்டும். ஆனால் இதற்கு முதலீடு குறித்து விழிப்புணர்வு தேவை. 

1 /7

இன்றைய காலகட்டத்தில் கோடீஸ்வரர் ஆவது கடினமான காரியம் இல்லை என்பதும் ஓரளவுக்கு உண்மைதான். சிறிய தொகையைச் சேர்ப்பதன் மூலம் இலக்கை அடையலாம். ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் சேமித்தால், எத்தனை நாட்களில் நீங்கள் கோடீஸ்வரர் ஆவீர்கள். ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் சேமிப்பது நடுத்தர வருமானம் உடையவர்களுக்கு கடினமான காரியம் அல்ல.   

2 /7

அனைவருக்கும் பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்ட் பற்றி தெரியும். மாதத்திற்கு வெறும் 500 ரூபாயில் நீங்கள் பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்யலாம். அதில், SIP என்பது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான ஒரு வழியாகும். 

3 /7

ஒவ்வொரு மாதமும் மியூச்சுவல் ஃபண்டில் ரூ. 5000 எஸ்ஐபி திட்டத்தில் முதலீடு செய்து, அதில் 15% வருடாந்திர வருமானத்தைப் பெற்றால், 22 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் கோடீஸ்வரர் ஆகிவிடுவீர்கள். உங்களிடம் மொத்தம் ரூ.1.03 கோடி இருக்கும். 

4 /7

உங்கள் முதலீட்டை பொறுத்தவரை, நீங்கள் 22 ஆண்டுகளில் நீங்கள் மொத்தம் ரூ.13.20 லட்சம்  மட்டுமே டெபாசிட் செய்திருப்பீர்கள். இதில் ஆண்டு வருமானம் 17 சதவீதம் என்ற அளவில் கணக்கிட்டால், மாதந்தோறும் ரூ. 5000 முதலீடு செய்வதன் மூலம், 20 ஆண்டுகளிலேயே மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து ரூ.1.01 கோடி வருமானம் பெறலாம். 

5 /7

நீங்கள் மாதம் 5000 ரூபாயில் முதலீடு செய்ய ஆரம்பித்த நிலையில்,  உங்கள் வருமானம் கூட கூட, ஆண்டுக்கு 10 சதவீதம் என்ற அளவில் முதலீட்டை அதிகப்படுத்தினால், 12 சதவீதம் ஆண்டு வருமானம் இருந்தால் கூட, 20 ஆண்டுகளிலேயே, உங்களிடம் 1 கோடி ரூபாய் இருக்கும். 

6 /7

மாதாந்திர எஸ்ஐபி ரூ.5000 என்ற அளவில் முதலீடு செய்து வரும் நிலையில், முதலீட்டு அளவை ஆண்டுதோறும் 10 சதவீதம் அதிகரித்தால் வருமானமும் கூடிக் கொண்டே போகும். அதன் ஆண்டு வருமானம் 15 சதவிகிதம் என்றால், உங்களிடம் மொத்தம் 1,39 ,18,156 ரூபாய் கையில் இருக்கும். அதேசமயம் இந்த காலகட்டத்தில் நீங்கள் மொத்தம் 34,36,500 ரூபாய் மட்டுமே முதலீடு செய்திருப்பீர்கள். 

7 /7

ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை சம்பளம் வாங்குபவர்களால் இதைச் செய்ய முடியும். முதலீட்டுத் தொகை இருமடங்காக இருந்தால் இயற்கையாகவே வருமானமும் இரட்டிப்பாகும். எனவே, இன்றே முதலீட்டை  உங்கள் எதிர்காலத்தை மறக்க முடியாததாக ஆக்குங்கள். முக்கிய குறிப்பு: இந்த கட்டுரை தரவு அடிப்படையிலானது. மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன், நிதி ஆலோசகரின் உதவியைப் பெறவும்.