செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், பண வரவு அதிகமாகும்

Mars Transit: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. கிரக மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். 

Mars Transit: பிப்ரவரி 5 ஆம் தேதி கிரகங்களின் தளபதியான செவ்வாய் சனி பகவானின் ராசியான மகர ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இங்கு ஏற்கனவே சூரியனும் புதனும் இருப்பார்கள். மகரத்தில் செவ்வாய் மற்றும் புதனின் சேர்க்கை நடக்கும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /8

செவ்வாய் பிப்ரவரி 5 ம் தேதி மகர ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் பல விதமான நற்பலன்கள் ஏற்படும். இவர்கள் வெற்றியின் உச்சம் தொடுவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

2 /8

மேஷ ராசிக்காரர்கள் வாழ்க்கையின் பெரும்பாலான துறைகளில் முன்னேற்றம் காண்பார்கள். பண வரவு அதிகமாகும். பொருளாதார நிலை மேம்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் இடையே நல்ல ஒற்றுமை இருக்கும்.  குடும்பத்தின் அனைத்துப் பொறுப்புகளையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.  

3 /8

செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் காரணமாக ரிஷப ராசிக்காரர்கள் தொழில் துறையில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளையும் தைரியமாக எதிர்கொள்வார்கள். கடின உழைப்பால் வெற்றியை அடைவார்கள். செவ்வாயின் அருளால் புகழும், மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ​​உங்கள் தைரியம் அதிகரிக்கும், இதன் காரணமாக நீங்கள் எந்த புதிய வேலை அல்லது புதிய விஷயங்களைச் செய்வதிலும் தயங்க மாட்டீர்கள். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள்.

4 /8

செவ்வாயின் ராசி மாற்றத்தால் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செல்வம் பெருகும், பண வரவு அதிகமாகும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். நீங்கள் கடன் வாங்கியிருந்தால், அதை முழுமையாக இப்போது திருப்பிச் செலுத்த முடியும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். இந்த காலகட்டத்தில், பெற்றோரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மேலும் வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம்.  

5 /8

செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் காரணமாக நீங்கள் போதுமான அளவு பணத்தைப் பெறுவீர்கள், மேலும் முன்னேற உந்துதல் பெறுவீர்கள். உங்கள் வியாபாரம் நன்றாக இருக்கும். மேலும் நீங்கள் நிதி ரீதியாகவும் செழிப்புடன் இருப்பீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கான பொன்னான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். நண்பர்களுடன் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

6 /8

செவ்வாய் பெயர்ச்சி காரணமாக, இந்த காலத்தில் உங்கள் வேலை மற்றும் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுப்பீர்கள். மேலும் செல்வ வளர்ச்சிக்கான பல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். இது உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகத்தில் அனைவருடனும் நல்லுறவைக் கொண்டிருப்பார்கள். உங்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வணிகத்தில் லாபம் இரட்டிப்பாகும். 

7 /8

இந்த காலகட்டத்தில், நீங்கள் பல சவால்களை எதிர்கொள்வீர்கள். ஆனால், செவ்வாயின் அருளால் அனைத்து பிரச்சனைகளையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். நீங்கள் நிதி ஸ்திரத்தன்மைக்காக கடினமாக உழைப்பீர்கள், உங்கள் வார்த்தைகளால் மற்றவர்களை எளிதில் ஈர்க்கும் ஆற்ரல் அதிகமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவார்கள். சகோதர சகோதரிகளுடனான உறவுகள் நன்றாக இருக்கும். 

8 /8

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.