Healthy Sweet: புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் செயற்கை இனிப்புகளுக்கு மாற்று

இனிப்பது எல்லாம் ஆரோக்கியமானது அல்ல, சுவையூட்டும் இனிப்பே சுகாதார கேடுகளுக்கு காரணமாகிரது. செயற்கை இனிப்பூட்டிகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையுடன் ஒப்பிடும்போது குறைவான கலோரிகளுடன், இனிப்பு சுவையை வழங்குகின்றன.

எனவே அவை பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.  சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் செயற்கை இனிப்புகளை உட்கொள்வதை குறைக்க விரும்புகிறீர்களா? தேர்வு செய்ய சில ஆரோக்கியமான மாற்றுகள் இவை....

1 /6

நாம் தினசரி உட்கொள்ளும் பல உணவுப் பொருட்கள் மற்றும் பானங்களில் செயற்கை இனிப்புகள் உள்ளன, அவற்றில் சில புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கலாம். PLOS மருத்துவத்தில் மார்ச் 24 அன்று வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், அதிக அளவு செயற்கை இனிப்புகளை உட்கொள்வது கண்டறியப்பட்டது. 

2 /6

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் செயற்கை இனிப்புகளை உட்கொள்வது ஆரோக்கியத்தை குலைக்கும்

3 /6

ஸ்டீவியா இன்று மக்களால் பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான இயற்கை இனிப்புகளில் ஒன்றாகும். இது தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு இலை மூலிகையான ஸ்டீவியா ரெபாடியானாவின் இலைகளிலிருந்து பெறப்பட்டது. ஸ்டீவியாவின் சாறு வெள்ளை சர்க்கரையை விட 100 முதல் 300 மடங்கு இனிப்பானது.

4 /6

மொலாசிஸ் என்பது, கொதிக்கும் கரும்பு அல்லது சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாற்றில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் நிறைந்துள்ளது. இதில் பல ஆக்ஸிஜனேற்றங்களும் உள்ளன.

5 /6

இயற்கையான தேனில் தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கொண்ட பல தாவர கலவைகள் உள்ளன. ஆனால், பதப்படுத்தப்பட்ட அல்லது பேஸ்டுரைஸ் செய்யப்பட்ட தேனில் இந்த ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்காது. எனவே இயற்கை தேனே ஆரோக்கியத்திற்கு நல்லது

6 /6

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு சிறந்த மாற்றாக இருப்பதுடன், நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீஸ், வைட்டமின் பி6 மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகியவை பேரீச்சம்பழத்தில் உள்ளது.