T20 உலக கோப்பை : ஒன்டிப் கேட்சுக்கு ரிவ்யூ கேட்ட ஆஸ்திரேலியா, ஸ்டார்க் ஓவரை பொளந்த ரோகித் சர்மா

செயிண்ட் லூசியாவில் நடைபெற்ற போட்டியில் ரோகித் சர்மாவின் ஒன்டிப் கேட்சுக்கு ஆஸ்திரேலியா அணி அவுட் கேட்க, அம்பயர் ரிவ்யூ எடுத்தார்.

வெஸ்ட் இண்டீஸ் செயிண்ட் லூசியாவில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான குரூப்8 சுற்றுப் போட்டி நடைபெற்றது. டாஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

1 /8

ஆஸ்திரேலியா அணியைப் பொறுத்தவரை கட்டாயம் வெற்றி பெற வேண்டிய போட்டி இது. இந்திய அணி வெற்றி பெறவில்லை என்றாலும், மோசமான தோல்வி அடையாமல் இருந்தாலே போதும் என்றளவில் இப்போட்டியை எதிர்கொண்டது.

2 /8

இந்திய அணியில் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் இல்லை. முகமது சிராஜ் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மீண்டும் இப்போட்டியில் பெஞ்சிலேயே உட்கார வைக்கப்பட்டார்.

3 /8

இதனையடுத்து விராட் கோலி - ரோகித் சர்மா ஆகியோர் ஓப்பனிங் இறங்கினர். ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார் பவுலரான மிட்செல் ஸ்டார்க் பந்துவீசினார். இருவருக்கும் இடையே ஐபிஎல் தொடரில் தொடரில் இருந்தே ஒருவிதமான புகைச்சல் இருந்தது.

4 /8

ஆனாலும், ரோகித் மிட்செல் ஸ்டார்க்கை சூப்பராகவே எதிர்கொண்டார். அவர் வீசிய முதல் ஓவரில் ஒரு பந்து ரோகித் சர்மாவின் பேட்டில் பட்டு கீழே குத்தி ஒன்டிப்பில் மிட்செல் மார்ஷ் கேட்ச் பிடித்தார்.

5 /8

அது கேட்ச் இல்லை என பவுலர் ஸ்டார்க்குக்கு தெரிந்தாலும், கேப்டன் மார்ஷ் கேட்ச் என அப்பீல் கேட்டார். அம்பயரும் சரியாக கவனிக்காததால் மூன்றாவது நடுவருக்கு பரிந்துரைத்தார். அதில் பந்து கீழே குத்தியது தெளிவாக தெரிந்ததால், அவுட் இல்லை என கொடுக்கப்பட்டது.

6 /8

அடுத்த ஓவர் ஹேசில்வுட் வீசிய நிலையில் விராட் கோலி கேட்ச் என்ற முறையில் டக் அவுட்டானார். ஆனால், அடுத்து ஸ்டார்க் மீண்டும் ஓவர் வீச வர, ரோகித் பொளந்து கட்டினார். மூன்று சிக்சர்கள், ஒரு பவுண்டரி விளாசி அமர்களப்படுத்தினார். இதனால், ஸ்டார்க் நிலைகுலைந்து போனார்.

7 /8

ஸ்டார்கின் இரண்டு ஓவர்களில் 34 ரன்களை இந்திய அணி எடுக்க, ஹேசில் வுட்டின் இரண்டு ஓவர்களில் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இருப்பினும் ரோகித் அதிரடியை நிறுத்தவில்லை. 18 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார். ஸ்டார்க்கின் ஒரே ஓவரில மட்டும் 22 ரன்களுக்கும் மேல் விளாசினார் ரோகித்.

8 /8

அதில் ஒரு சிக்சர் மட்டும் 100 மீட்டர் மெகா சிக்சர். மைதானத்தின் கூரை மீது போய் விழுந்தது. இதனிடையே மழை திடீரென குறுக்கிட சில நிமிடங்கள் பாதிக்கப்பட்ட போட்டி, மீண்டும் தொடங்கியது. அப்போதும் ரோகித் அதிரடி பேட்டிங்கே ஆடினார்.