Women's Day 2024 : சிங்கப்பெண்ணாக மாற வேண்டுமா? அப்போ ‘இந்த’ படங்களை கண்டிப்பா பாருங்க..

Women's Day 2024 Special Watch These Women Empowerment Movies : உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, பெண்களை மையமாக வைத்தும் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களின் பட்டியலையும் இங்கு பார்ப்போம். 

Women's Day 2024 Special Watch These Women Empowerment Movies : ஒட்டுமொத்த உலக திரையுலகை பொறுத்தவரை, பல படங்கள் இதுவரையில் ஆண்களின் கதாப்பாத்திரங்களை மையமாக வைத்தும், அவர்களை சுற்றி சுழலுவது போன்றும்தான் கதை அமைக்கப்பட்டிருக்கும். பெண்களை வைத்து எடுக்கப்பட்ட படங்கள் சிலதான் என்றாலும்,  அவை சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளன. அவை என்னென்ன என்று இங்கு பார்ப்போம். 

1 /7

மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, இன்று அதுகுறித்த செய்திகள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், பெண்களையும், பெண்களின் முன்னேற்றத்தையும் முன்நிருத்தி வெளியான படங்களின் லிஸ்ட், இதோ

2 /7

ஆண்ட்ரியா, சிங்கிள் பேரண்டாக நடித்திருந்த படம், தரமணி. இந்த படத்தில் பாலியல் பாகுபாடு, பாலியல் ஈர்ப்பு உள்ளிட்ட பல விஷயங்களை ஒரு பெண் எப்படி எதிர்கொள்கிறாள் என்பதை காண்பித்திருப்பர். இப்படம் பெரிய ஹிட் அடித்தது. 

3 /7

1994ஆம் ஆண்டு வெளியான காமெடி-புரட்சி படம், மகளிர் மட்டும். இதில், ரேவதி, ஊர்வசி, ரோஹினி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பர். அப்போது பெரிய அளவில் ஹிட் ஆன படம் இது. இதில் வரும் டைலாக்குகள் இப்போதும் புரட்சி பேசுபவையாக இருக்கின்ரன. 

4 /7

1995ஆம் ஆண்டு அனு, அரவிந்த் சாமி ஆகியோரின் நடிப்பில் வெளியான படம், இந்திரா. சாதி பாகுபாடு காரணமாக பிரிந்திருக்கும் இரண்டு கிராமங்களை ஒன்றிணைக்கும் ஒரு பெண்ணின் கதையே, இந்திரா. 

5 /7

இந்தியில் வெளியான ‘பிங்க்’ எனும் படத்தின் ரீ-மேக்தான், நேர்கொண்ட பார்வை. இந்த படத்தில்தான் ‘நோ மீன்ஸ் நோ’ என்பதை பலருக்கு உணர்த்தினர். மக்கள் மத்தியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய படம் இது. 

6 /7

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1974ஆம் ஆண்டு வெளியான படம், அவள் ஒரு தொடர்கதை. ஒரு குடும்பத்தையே தனியாளாக கட்டிகாக்கும் ஒரு பெண் பற்றிய கதை இது. 

7 /7

பலருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படம், அருவி. எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு குடும்பத்தாலும் சமூகத்தாலும் புறம் தள்ளப்பட்ட பெண்ணின் கதையை கூறும் படம் இது.