Tech Tips: உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரி வெடிக்காமல் இருக்க...!

ஸ்மார்ட்போன் வெடித்துச் சிதறும் சம்பவம் அடிக்கடி அரங்கேறத் தான் செய்கின்றது. சமீபத்தில் கேரள மாநிலம் திருவில்வமாலா கிராமத்தில், வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்த போது மொபைல் போன் வெடித்து, எட்டு வயது சிறுமியின் உயிரை பறித்த சம்பவம் நடந்தது அனைவருக்கு நிச்சயம் நினைவில் இருக்கும். இந்நிலையில், ஸ்மார்ட்போன் வெடிப்பதைத் தடுக்க உதவும் சில டிப்ஸ்களை பகிர்ந்து கொள்ளப் போகிறோம்.

1 /7

இன்றைய நாளில் ஸ்மார்ட்போன் இல்லாத நபர்களே இல்லை எனலாம்.  தற்போது குழந்தைகள் மற்றும் இளம் மாணவர்கள் என பலரும் ஸ்மார்ட்போன்களுடன் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். 

2 /7

சில நாட்களுக்கு முன் கேரள மாநிலத்தில், வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்த போது மொபைல் போன் வெடித்து, 8 வயது சிறுமியின் உயிரை பறித்த சம்பவம்  அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

3 /7

கோடை காலத்தில் ஸ்மார்ட்போன்களில் வெடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும்நிலையில். நேரடி சூரிய ஒளியில் உங்கள் ஸ்மார்ட்போனை நீண்ட நேரம் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். கோடை நாட்களில் ஸ்மார்ட்போனை உங்கள் காரில் வைப்பது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்.  

4 /7

உங்கள் ஃபோன் சார்ஜ் ஆகும் போது அதைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது எப்போதும் நல்லது. அதோடு, எப்போதும் உற்பத்தியாளரால் அங்கீகரிக்கப்பட்ட சார்ஜர்கள் மற்றும் கேபிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

5 /7

உங்கள் மொபைலை நீண்ட நேரம் சார்ஜிங்கில் வைக்காதீர்கள். இரவு முழுவதும் சார்ஜ் செய்வதும் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும். உங்கள் தொலைபேசி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டவுடன் சார்ஜரை அகற்றவும்.

6 /7

உங்கள் ஸ்மார்ட்போன் மிகவும் சூடாக இருந்தால் அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். உங்கள் ஸ்மார்ட்போனை அணைத்து சில நிமிடங்களுக்கு குளிர்ச்சியடைய வைப்பது நல்லது.

7 /7

உங்கள் ஸ்மார்ட்போனின் மென்பொருளை எப்போதும் சரியான நேரத்தில் புதுப்பிக்கவும். இது அதிக வெப்பம் உட்பட பல சிக்கல்களை தீர்க்கும்.