ஜூன் 1 முதல் மாறும் முக்கிய விதிகள்: தினசரி வாழ்விலும் இருக்கும் தாக்கம்

Rules to change from 1st June: ஜூன் 1 முதல் வங்கி, எல்பிஜி சிலிண்டர் விலை, ஐடிஆர் தாக்கல், சிறு சேமிப்பு மீதான வட்டி போன்ற பல திட்டங்களின் விதிகள் மாறும். இவை உங்கள் வாழ்விலும் பாக்கெட்டில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய, உங்களை பாதிகக்கூடிய மாற்றங்கள் என்ன என்பதை காணலாம்.

வங்கித் துறை முதல் வருமான வரி தாக்கல் வரை சில முக்கியத் துறைகளில் இந்த மாற்றங்கள் இருக்கும். இந்த மாற்றங்களைப் பற்றி பொது மக்கள் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

1 /7

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (ஈபிஎஃப்ஒ) தனது சந்தாதாரர்களுக்கான விதிகளை ஜூன் 1 முதல் மாற்றியுள்ளது. EPFO இன் புதிய விதிகளின்படி, ஒவ்வொரு சந்தாதாரரும் PF கணக்கை  ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். ஊழியர்களின் ஆதாருடன் அவர்களது பி.எஃப் கணக்கு இணைக்கப்படுவதை உறுதி செய்வது முதலாளியின் / நிறுவனனத்தின் பொறுப்பாகும். ஜூன் 1 ஆம் தேதிக்குள் இதை செய்யத் தவறினால், பல இழப்புகளை சந்திக்க நேரிடும் என ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. உதாரணமாக, பி.எஃப் கணக்கில் செலுத்தப்படும் நிறுவன பங்கீடும் நிறுத்தப்படலாம். இது தொடர்பாக ஈ.பி.எஃப்.ஓ ஒரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.  

2 /7

வருமான வரித் துறையின் மின்-தாக்கல் போர்டல் (E-Filing Portal) ஜூன் 1 முதல் 6 வரை இயங்காது. வருமான வரித் துறை, ஜூன் 7 ஆம் தேதி வரி செலுத்துவோருக்கு, வருமான வரி மின் தாக்கலுக்கான புதிய போர்ட்டலை தொடங்கும். தற்போது வரை http://incometaxindiaefiling.gov.in. என்ற வலைத்தளம் இயக்கத்தில் உள்ளது. வருமான வரி தாக்கல் செய்வதற்கான அதிகாரப்பூர்வ வலைத்தளம் 7 ஜூன் 2021 முதல் மாறும். ஜூன் 7 முதல், http://INCOMETAX.GOV.IN என்ற வலைத்தளம் இயக்கத்தில் இருக்கும்.   

3 /7

கனரா வங்கி ஜூன் 30 க்குள் ஐ.எஃப்.எஸ்.சி குறியீட்டைப் புதுப்பிக்க சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்களைக் கேட்டுள்ளது. ஜூலை 1 முதல், அவர்களின் பழைய ஐ.எஃப்.எஸ்.சி குறியீடு செல்லாது.  சிண்டிகேட் வங்கியை கனரா வங்கியுடன் இணைத்த பின்னர், SYNB உடன் தொடங்கும் அனைத்து சிண்டிகேட் IFSC குறியீடுகளும் மாறிவிட்டன என்று கனரா வங்கி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூறியுள்ளது.

4 /7

ஜூன் 1 முதல், காசோலை மூலம் பணம் செலுத்தும் முறை வங்கியில் மாற உள்ளது என்பதை பாங்க் ஆப் பரோடாவின் வாடிக்கையாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். வங்கி தனது வாடிக்கையாளர்களுக்காக 'பாசிடிவ் பே சிஸ்டம்' என்ற செயல்முறையைத் தொடங்கியுள்ளது. இதன்படி காசோலை வழங்குபவர் அந்த காசோலை தொடர்பான சில தகவல்களை மின்னணு முறையில் வங்கிக்கு வழங்க வேண்டும். இந்த தகவலை எஸ்எம்எஸ், மொபைல் செயலி, இணைய வங்கி அல்லது ஏடிஎம் மூலம் வழங்கலாம். வாடிக்கையாளர்கள் 2 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட வங்கி காசோலையை வழங்கும்போது மட்டுமே பாசிடிவ் பே முறையின் கீழ் காசோலை விவரங்களை உறுதிப்படுத்த வேண்டும்.

5 /7

சிறு சேமிப்பு திட்டங்களான பிபிஎஃப், என்எஸ்சி, கேவிபி மற்றும் சுகன்யா சமிர்தி திட்டம் ஆகியவற்றின் வட்டி விகிதங்களில் மாற்றம் ஏற்படலாம். இத்தகைய திட்டங்களில், மூன்று மாதத்துக்கு ஒரு முறை வட்டி விகிதங்களில் மாற்றங்களை அரசாங்கம் அறிவிக்கிறது. பல முறை பழைய வட்டி விகிதங்கள் திருத்தப்படுகின்றன. வட்டி விகிதங்கள் 2020-21 நிதியாண்டின் இறுதியில் அதாவது மார்ச் 31 அன்று வெளியிடப்பட்டன. ஆனால், 24 மணி நேரத்திற்குள் அவை திரும்பப் பெறப்பட்டன. இப்போது ஜூன் 30 முதல் புதிய வட்டி விகிதங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும்.

6 /7

LPG எரிவாயு சிலிண்டர்களின் விலை ஜூன் 1 அன்று மாறக்கூடும். ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில், நாட்டின் அரசு எண்ணெய் நிறுவனங்கள் LPG சிலிண்டர்களின் விலையை தீர்மானிக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது. விலைகள் மாற்றப்படும் போது, அப்போது உள்ள நிலையைப் பொறுத்து விலைகள் அதிகரிக்கப்படலாம் அல்லது குறைக்கப்படலாம்.  

7 /7

ஜூன் 1 முதல், கூகிள் ஃபோடோசில் வரம்பற்ற புகைப்படங்களை பதிவேற்ற முடியாது. ஒவ்வொரு GMail பயனருக்கும் 15 ஜிபி இடம் வழங்கப்படும் என்று கூகிள் கூறுகிறது. இந்த இடத்தில் GMail-லின் மின்னஞ்சல்கள், உங்கள் புகைப்படங்கள் அனைத்தும் அடங்கும். இதில் Google Drive-வும் இடம்பெறும். நீங்கள் 15 ஜிபிக்கு மேல் இடத்தைப் பயன்படுத்த விரும்பினால், அதற்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இதுவரை வரம்பற்ற சேமிப்பு இலவசமாக கிடைத்துக்கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.