முடி உதிர்தலுக்கு முடிவே இல்லாமல் இருக்கா.. இந்த உணவுகளுக்கு நோ சொல்லுங்க!

இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, மன அழுத்தம், நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிடுவது, துரித உணவு சாப்பிடுவது போன்ற பழக்கம் அதிகரித்துவிட்டது. இதனால் ஏற்படும் பல பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்தல்.

முடி உதிர்தலுக்கு, சுற்றுச்சூழல் மாற்றங்கள், சில உடல் நல பாதிப்புகள், சில சத்துக்களின் குறைபாடு ஆகியவையும்  காரணமாக இருக்கலாம்.

1 /6

புரோட்டின் நிறைந்த ஆரோக்கியமான உணவு என்பதை மாற்று கருத்து இல்லை. உடல் பருமனை குறைப்பது முதல், இதய ஆரோக்கியம் வரை பல விஷயத்தில் முட்டை மிகவும் நன்மை பயக்கும். ஆனால், வேக வைக்காத, பச்சை முட்டையின் வெள்ளை கரு பயோட்டின் குறைபாட்டை ஏற்படுத்தும். இது கூந்தல் ஆரோக்கியத்தை பெரிதளவு பாதிக்கும்.  

2 /6

அதிக அளவிலான சர்க்கரை கொண்ட உணவுகள், கேக் சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவை பொதுவாகவே உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதன் காரணமாக நீரழிவு உடல் பருமன் மட்டுமல்லாது கூந்தலின் ஆரோக்கியத்தையும் பெரிதும் பாதிக்கிறது. அதிகப்படியான சர்க்கரை முடி உதிர்தல் மற்றும் பொடுகு ஏற்பட வழி வகுக்கும்.  

3 /6

மதுப்பழக்கம், உடலுக்கு மட்டுமல்ல கூந்தலையும் பெரிதும் பாதிக்கிறது. அதிகப்படியான மது பானம், க்யூட்டிக்கல் என்ற கூந்தலின் வெளிப்புற அடுக்கை சேதம் செய்து, கூந்தல் ஆரோக்கியத்தை கெடுக்கிறது. க்யூட்டிக்கல் என்பது கூந்தலுக்கு இயற்கையான நிறத்தை, வழங்குவதோடு முடியை சேதத்தில் இருந்து பாதுகாக்கும் பொருளாகும்.

4 /6

துரித உணவுகளில் ஊட்டச்சத்து என்பது இல்லவே இல்லை. அதில் இருப்பது கொழுப்பு சர்க்கரை மற்றும் கலோரிகள் மட்டுமே. இது கூந்தல் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கிறது. இதனால் கூந்தல் வலுவிழப்பதோடு, செரிமானம் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படும்.

5 /6

அதிக கிளைசிமிக் இன்டெக்ஸ் கொண்ட உணவுகள் கூந்தல் ஆரோக்கியத்திற்கு வீட்டு வைக்கும். சர்க்கரை தேன், வெள்ளை ரொட்டி, பிஸ்கட் கரும்புச்சாறு போன்றவற்றை மிதமாக சாப்பிடுவது நல்லது

6 /6

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.