Tokyo Olympics: விளையாடும் தன்மை மாறுபட்டாலும், வெற்றியின் சுவை ஒன்றே

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆண்டு நடைபெறவேண்டியது, கொரோனாவால் ஒத்தி போடப்பட்டு இந்த ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

யார் எந்த நாட்டுக்காக விளையாடினாலும், எவ்வளவு திறமையாக விளையாடினாலும், விளையாட்டு என்பது உலகளாவிய அம்சம். திறமைகள் மாறுபடலாம், உணர்ச்சிகள் மாறுபடலாம், வேகமும் விவேகமும் மாறுபடலாம், ஆனால், வென்ற பின் பதக்கம் பெறும்போது ஏற்படும் மகிழ்ச்சியும் பரவசமும் ஒன்றே… டோக்கியோ ஒலிம்பிக்கின் சில வெற்றித் தருணங்கள்

Also Read | Tokyo Olympics: மீராபாய் சானுவின் வெள்ளி பதக்கம், தங்கமாக மாறுமா?

 

1 /6

மீராபாய் சானுவின் வெள்ளி பதக்கம், தங்கமாக மாறுமா? என்ற கேள்விக்கான பதில், தங்கத்தை வென்ற சீனப் பெண்ணுக்கு எடுக்கப்படும் பரிசோதனை முடிவில் தான் தெரியும்... Photo Courtey: @Tokyo2020

2 /6

ஜப்பானின் மிசுதானி ஜுன் மற்றும் ஐ.டி.ஓ மிமா இருவரும், ஒலிம்பிக் வரலாற்றில் ஜப்பானுக்காக முதல் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் தங்கப் பதக்கம் வென்ற ஜோடி….   Photo Courtey: @Tokyo2020

3 /6

டோக்கியோவில் 2020 இல் பிலிப்பைன்ஸ் கொடியை வானுயர பறக்கச் செய்தவரின் ஒலிம்பிக்  வரலாற்று தருணம். பிலிப்பைன்ஸின் ஹிடிலின் டயஸ்ஃப்ளாக், பெண்கள் 55 கிலோ பளுதூக்கும் பிரிவில் தங்கம் வென்றார். பிலிப்பைன்சுக்காக முதல் ஒலிம்பிக் தங்கம் வென்ற தங்க மங்கை, இப்போது இரண்டு ஒலிம்பிக் சாதனைகளைப் படைத்துள்ளார்! Photo Courtey: @Tokyo2020

4 /6

ஜப்பானின் ONO Shohei ஜூடோவில் ஆண்கள் -73 கிலோ பிரிவில் தங்கம் வென்றார் Photo Courtey: @Tokyo2020

5 /6

டோக்கியோவில் வெற்றி பெற்றவர்களுக்கு கொடுக்கப்படும் பதக்கங்கள் உண்ணக்கூடியவை அல்ல! Photo Courtey: @Tokyo2020

6 /6

இது ஆனந்தக் கண்ணீர் Photo Courtey: @Tokyo2020