மே மாதத்தில் விற்பனையில் கலக்கிய டாப் 8 கார்கள்... எது முதலிடம் தெரியுமா?

Car Sales In May 2024: கடந்த மே மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 8 கார் மாடல்கள் என்னென்ன என்பதையும், அவை மே மாதத்தில் மட்டும் மொத்தம் எவ்வளவு விற்பனையானது என்பதை விரிவாக இங்கு காணலாம். 

  • Jun 11, 2024, 20:21 PM IST

இந்திய சந்தையில் மாருதி சுசுகி நிறுவனத்தின் கார்கள் மிகவும் ஆதிக்கம் செலுத்திகின்றன. டாப் 8 கார்களில் 5 மாடல்கள் மாருதி சுசுகி உடையதாகும். 

1 /8

8. Mahindra Scorpio / N: கடந்த மே மாதத்தில் மட்டும் இந்த கார் மொத்தம் 13 ஆயிரத்து 717 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. இது கடந்தாண்டு மே மாதத்தில் பார்த்தால், 9 ஆயிரத்து 318 யூனிட்களே விற்பனையாகி உள்ளன. அதாவது இந்தாண்டு மே மாதம் 4,339 கார்கள் அதிகம் விற்பனையாகி உள்ளன. ஆனால், இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த கார் 14 ஆயிரத்து 807 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. இதன்மூலம், இந்த மே மாதத்தில் 1,090 யூனிட்கள் குறைவாக விற்பனையாகி உள்ளன.   

2 /8

7.Maruti Ertiga: இந்த கார் மே மாதத்தில் 13 ஆயிரத்து 893 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. மேலும், இது கடந்தாண்டு மே மாதம் 10 ஆயிரத்து 528 யூனிட்களே விற்பனையாகி உள்ளது. அதாவது, 3,365 யூனிட்கள் இந்த மே மாதத்தில் அதிகம் விற்றுள்ளன. அதேபோல், கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆயிரத்து 544 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன.   

3 /8

6. Maruti Breeza:  இந்த மே மாதத்தில் இந்த கார் மொத்தம் 14 ஆயிரத்து 186 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. மேலும், கடந்தாண்டு மே மாதம் 13 ஆயிரத்து 398 யூனிட்களே விற்பனையாகி உள்ளது. அதன்மூலம், இந்தாண்டு 788 யூனிட்கள் அதிகம் விற்பனையாகி உள்ளது. இதே, கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த கார் 17 ஆயிரத்து 113 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. அதாவது ஏப்ரல் மாதத்தை விட இந்த மே மாத்தில் 2 ஆயிரத்து 927 யூனிட்கள் குறைவாக விற்பனையாகி உள்ளன.   

4 /8

5. Maruti WagonR: இந்த கார் இந்தாண்டு மே மாதத்தில் 14 ஆயிரத்து 492 கார்கள் விற்பனையாகி உள்ளன. மேலும், 2023ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆயிரத்து 258 கார்கள் விற்பனையான நிலையில், இந்தாண்டு 1,766 கார்கள் குறைவாக விற்பனயைாகி உள்ளன. மேலும், கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆயிரத்து 850 யூனிட்கள் விற்பனையான நிலையில், மாதாந்திர விற்பனையில் சுமார் 3 ஆயிர்தது 358 யூனிட்கள் குறைவாக விற்பனையாகி உள்ளன.  

5 /8

4. Hyundai Creta: இந்த மே மாதத்தில் இந்த கார் 14 ஆயிரத்து 662 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. அதுவே கடந்தாண்டு மே மாதம் 14 ஆயிரத்து 449 யூனிட்களே விற்பனையாகியிருக்கிறது. இதன்மூம் 413 யூனிட்கள் இந்தாண்டு விற்பனையில் உயர்ந்துள்ளன. அதேநேரத்தில் கடந்த ஏப்ரல் மாதம் இந்த கார் 15 ஆயிரத்து 447 யூனிட்கள் விற்பனையான நிலையில், இந்த மாதம் 785 யூனிட்கள் விற்பனையில் குறைந்துள்ளன.  

6 /8

3. Maruti Dzire: இந்த கார் இந்தாண்டு மே மாதம் 16 ஆயிரத்து 61 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. அதே நேரத்தில் கடந்தாண்டு மே மாதம் 11 ஆயிரத்து 315 யூனிட்கள் விற்பனையாகி உள்ளதன. அதாவது இந்தாண்டு மே மாதம் 4 ஆயிரத்து 746 கார்கள் அதிகமாக விற்றுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆயிரத்து 825 கார்கள் விற்ற நிலையில் இந்த மாதத்தில் 236 யூனிட்கள் அதிகமாகி உள்ளன.   

7 /8

2. Tata Punch / EV: இந்த கார் இந்தாண்டு மே மாத்தில் மொத்தம் 18 ஆயிரத்து 949 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டு மே மாதம் 11 ஆயிரத்து 124 யூனிட்களே விற்பனையாகின. அதாவது கடந்தாண்டு மே மாதத்தை விட இந்தாண்டு 7 ஆயிரத்து 825 கார்கள் அதிகமாகி உள்ளது. அதே நேரத்தில் ஏப்ரல் மாதத்தில் 19 ஆயிரத்து 158 யூனிட்கள் விற்பனையானது. அதன்மூலம், கடந்த ஏப்ரலை விட மே மாதத்தில் 209 யூனிட்கள் குறைந்துள்ளன.   

8 /8

1. Maruti Swift: இந்த கார் கடந்த மே மாதத்தில் 19 ஆயிரத்து 393 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. மேலும், கடந்தாண்டு மே மாதம் 17 ஆயிரத்து 346 கார்கள் விற்பனையானது. அதாவது, இந்தாண்டு மே மாதம் 2 ஆயிரத்து 47 யூனிட்கள் அதிகமாகியிருக்கிறது. ஆனால், இது கடந்த ஏப்ரல்  மாதத்தில் வெறும் 4 ஆயிரத்து 94 யூனிட்களே விற்பனையாகின. அதாவது, இந்த மே மாத்தில் மட்டும் 15 ஆயிரத்து 299 யூனிட்கள் அதிகமாகி உள்ளது.