ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் ‘லியோ’ படத்தை கண்டுகளித்த த்ரிஷா..!

லியோ பட நாயகி த்ரிஷா, ரோகிணி திரையரங்கிள் ரசிகர்களுடன் சேர்ந்து லியோ படத்தை கண்டுகளித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

1 /7

தென்னிந்தியாவின் குயின் என்று அழைக்கப்படுபவர், த்ரிஷா. இவர். லியோ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

2 /7

விஜய்யுடன் பல படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்த இவர், 15 வருடங்கள் கழித்து மீண்டும் அவருடன் இணைந்து லியோ படத்தில் நடித்துள்ளார்.

3 /7

மீண்டும் விஜய்-த்ரிஷா ஜோடியை திரையில் பார்க்க ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு லியோ படம் பெரிய ட்ரீட்டாக அமைந்துள்ளது. இப்படத்தில் வெளியான ‘அன்பெனும்’ பாடலுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பினை கொடுத்துள்ளனர். 

4 /7

லியோ படம் இன்று வெளியாகியுள்ளதை ஒட்டி, த்ரிஷா அப்படதை முதல் நாள் முதல் காட்சி பார்த்துள்ளார். 

5 /7

ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் த்ரிஷா லியோ படத்தை கண்டுகளித்தார். 

6 /7

த்ரிஷா தியேட்டரில் வந்து படம் பார்த்த புகைப்படங்களை ரோகிணி திரையரங்கின் சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். இவை வைரலாகி வருகின்றன. 

7 /7

த்ரிஷா, அடுத்து அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தில் கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது.