ரோஹித் முதல் விராட் வரை: காத்திருக்கும் சாதனைகள்... ருசிக்கப்போவது யாரு?

IND vs BAN: நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியா - வங்கதேசம் அணிகள் இன்று மோத உள்ள நிலையில், இதில் எந்தெந்த வீரர்கள் என்னென்ன சாதனைகளை அடைய காத்திருக்கின்றனர் என்பதை இதில் காணலாம்.  

  • Oct 19, 2023, 13:19 PM IST

 

 

1 /7

IND vs BAN: இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டி புனே நகரில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று (அக். 19) நடைபெறுகிறது.    

2 /7

Virat Kohli: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சர்வதேச போட்டியில் (25,923) 26,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவதற்கு 77 ரன்கள் தேவை. இப்போது வரை அவர் 25 ஆயிரத்து 923 ரன்கள் எடுத்துள்ளனர்.

3 /7

Shubman Gill: இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் ஒருநாள் போட்டிகளில் 2000 ரன்களை எட்டுவதற்கு 67 ரன்கள் தேவை. இதுவரை 1933 ரன்கள் எடுத்துள்ளார். அடுத்த மூன்று போட்டிகளில் கில் இந்த சாதனையை நிகழ்த்தினால், ஹஷிம் ஆம்லாவின் சாதனையை முறியடித்து, ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.  

4 /7

Rohit Sharma: சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆயிரம் ரன்களை எட்ட இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு இன்னும் 141 ரன்கள் தேவை எனலாம். இப்போது அவர் 17 ஆயிரத்து 859 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த காலங்களில் ரோஹித் சர்மா வங்கதேசத்திற்கு எதிராக ரன்களை குவித்து வருபவராக உள்ளார். அந்த வகையில், இன்றைய போட்டியில் ரோஹித் இந்த மைல்கல்லை எட்டுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.   

5 /7

Shreyas Iyer: இந்திய அணியின் பேட்டர் ஷ்ரேயாஸ் ஐயர் இதுவரை சர்வதேச போட்டிகளில் 96 சிக்ஸர்களை அடித்துள்ளார். மேலும், நான்கு சிக்ஸர்களை அடித்தால் 100 என்ற மைல்கல் என்ற நிலையை எட்டுவார்.   

6 /7

Najmul Hossain Shanto: வங்கதேச அணியின் துணை கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 1,000 ரன்களை எட்டுவதற்கு 26 ரன்கள் தேவை. இதுவரை அவர் 974 ரன்களை எடுத்துள்ளார்.  

7 /7

Mehidi Hasan Miraz: வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் மெஹிதி ஹசன் மிராஸ் தனது 150வது சர்வதேச ஆட்டத்தில் தோன்ற இன்னும் ஒரு ஆட்டம் உள்ளது. அந்த மைல்கல்லை இன்று அவர் நிச்சயம் எட்டுவார் என எதிர்பார்க்கலாம்.