Boiled Vegetables For Diabetes: இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, சைவ உணவுகள் மிகவும் நல்லது என்றால், அதிலும் வேகவைத்த காய்கறிகள் எவ்வளவு பயனுள்ளது என்று தெரிந்தால் அசந்து போய்விடுவீர்கள்!
நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடுவதற்கும், இந்த ஆட்கொல்லி நோய் ஏற்படுத்தும் சேதங்களைத் தடுப்பதற்கும், நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது அவசியம். அதற்கு நாம் உண்ணும் உணவு முக்கியமானது.
ஆரோக்கியமான உணவு அனைவருக்கும் அவசியமானது என்றாலும், குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு உணவு என்பது அவர்களுடைய ஆயுளையும் ஆரோக்கியத்தைக் கட்டுப்படுத்த அடிப்படையான ஒன்றாக இருக்கிறது. சர்க்கரை நோய் பாதித்தவர்கள், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உணவு டயட்டை கடைபிடிப்பது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதுமட்டுமல்ல, இதய நோய்கள், சிறுநீரக பாதிப்பு மற்றும் நரம்பு சேதம் போன்ற நீரிழிவு தொடர்பான சிக்கல்களை எதிர்த்துப் போராடவும் உண்ணும் உணவே ஒரே வழியாகும். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க மக்கள் மருந்துகளை எடுத்துக்கொள்வதுடன், சரியான உணவின் உதவியுடன் அதைக் கட்டுப்படுத்தலாம். இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, பச்சை காய்கறிகள் மட்டுமல்ல, வேகவைத்த காய்கறிகளும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
நீரிழிவுக்கான உணவில் பழங்கள் மற்றும் பச்சை இலை காய்கறிகள் மற்றும் புரதம் என பல்வேறுவிதமான சத்துக்களும் இருக்க வேண்டும். நீரிழிவு உணவு அட்டவணை என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும் என்றாலும், காய்கறிகளை பச்சையாக அதாவது வேக வைக்காமல் உண்ணலாம் என்றாலும், வேக வைத்த காய்கறிகள் நல்ல பயனைக் கொடுக்கும், உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். அந்த வகையில், எந்தெந்த காய்களை வேகவைத்து உண்பது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்று தெரிந்துக் கொண்டு, அதை உண்டு வந்தால் ஆரோக்கியம் மேம்படும்
காலிஃபிளவரை வேகவைத்து சாப்பிடவும். காலிஃபிளவரின் கிளைசெமிக் இண்டெக்ஸ் மிகக் குறைவாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு வேக வைத்த காலிஃப்ளவர் மிகவும் நல்லது
வேகவைத்த பூசணிக்காயை உட்கொள்வது அதிக நன்மை பயக்கும் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதோடு, வயிறு தொடர்பான நோய்களைக் குணப்படுத்தவும் உதவுகிறது.
கசப்பு சுவையாக இருப்பதால், பலருக்கு பாகற்காய் பிடிப்பதில்லை. வேகவைத்த பாகற்காயின் அதன் கசப்புத்தன்மை பெரிய அளவிற்கு குறைந்துவிடும். பொதுவாக பாகற்காயை யாரும் பச்சையாக உண்பதில்லை. பாகற்காயை வேகவைத்து சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
சுரைக்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும், இதை உட்கொள்வது பல நோய்களிலிருந்து விடுபட உதவும். சிலர் சுரைக்காயை வேகவைக்காமல் சாப்பிடுகிறார்கள், அதன் சாற்றையும் குடிக்கிறார்கள், ஆனால் கொதித்த பிறகு அதை உட்கொள்வது, பச்சையாக உண்பதைவிட, அதிலும் ஜூஸாக குடிப்பதைவிட அதிக நன்மை பயக்கும்.
வேகவைத்த பச்சை பீன்ஸை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கும் நீரிழிவு தொடர்பான பிற பிரச்சனைகளுக்கும் மிகவும் உதவும்.
பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.