டிசம்பரில் இரு முறை பெயர்ச்சி ஆகும் சுக்கிரன்; இந்த ‘4’ ராசிகளுக்கு ராஜயோகம்

2022 டிசம்பரில் ருமுறை சுக்கிரன் ராசி மாறுவது 4 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்களைத் தரும். 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் பிரமாதமாக இருக்கும். சுக்கிரன் 3 டிசம்பர் 2022 அன்று தனுசு ராசியிலும், பின்னர் 29 டிசம்பர் 2022 அன்று மகர ராசியிலும் சஞ்சரிக்கிறார். இப்படி 2 முறை சுக்கிரன் சஞ்சரிப்பது 4 ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய பொருளாதார வளத்தை தரும். டிசம்பர் மாதத்தில் சுக்கிரன் சஞ்சாரம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக அமையும் என்பதை தெரிந்து கொள்வோம்.

1 /4

ரிஷபம் ராசியின் அதிபதி சுக்கிரன். சுக்கிரனின் சஞ்சாரம் இந்த ராசிகளுக்கு பண பலன்களை தரும். அவர்களின் வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் சம்பளம் கூடும். புதிய தொழில் தொடங்கலாம். இந்த நேரத்தில் உங்கள் ஆரோக்கியத்தை மிகவும் கவனித்துக் கொள்ளுங்கள். பண சேமிக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். 

2 /4

மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் நன்மை தரும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். இருப்பினும், செலவுகள் அதிகரிப்பதால் உங்களால் சேமிக்க முடியாது. வாழ்வில் வசதிகள் பெருகும். எதிர்பாராத பண வரவு மகிழ்ச்சியைத் தரும்.

3 /4

கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் நன்மை தரும். எந்தவொரு தொழில் பிரச்சனையும் சுமுகமாக தீர்க்கப்படும். இருப்பினும், அனைவரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்கவும். வாழ்க்கையில் ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். பண வரவு அதிகரிக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.  

4 /4

கன்னி ராசிக்காரர்களுக்கு, சுக்கிரனின் இரு ராசி மாற்றங்களும் மிகவும் சுபமாக அமையும். அவர்களின் வாழ்வில் எல்லா வகையிலும் மகிழ்ச்சி வரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். தாயாரின் உதவியால் பெரிய பிரச்சினை தீரும். வருமானம் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இதற்கு பொறுப்பேற்காது.)

You May Like

Sponsored by Taboola