எடை இழப்பு முதல் சுறுசுறுப்பான மூளை வரை... வியக்க வைக்கும் ஒயிட் டீ...!

நம்மில் பெரும்பாலானோரும் வழக்கமாக குடிக்கும் பால் சேர்த்த டீ, ப்ளாக் டீ மற்றும் க்ரீன் டீ குடித்திருக்க கூடும். ஆனால் நீங்கள் எப்போதாவது ஒயிட் டீயை அருந்தியிருக்கிறீர்களா? இது பொதுவாக கேள்விப்படாத தேநீர்.  வெள்ளை டீ என்பது குறைவான அளவில் பதப்படுத்தப்பட்ட டீ வகையாகும். 

White Tea என்னும் வெள்ளை தேநீர் என்பது தேயிலையிலிருந்து பெறக்கூடியவை தான். இது குறைவான அளவில் பதப்படுத்தப்பட்ட டீ வகையாகும். தேயிலை செடியின் மொட்டுகள் மற்றும் இலைகள் முழுவதும் விரிவதற்கு முன்பு பறிக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. 

1 /10

தேயிலை செடியின் மொட்டுகள் மற்றும் இலைகள் முழுவதும் விரிவதற்கு முன்பு பறிக்கப்பட்டு தயாரிக்கப்படும் இதில் சிறிய வெள்ளை முடிகள் இருப்பதால், இது வெள்ளை டீ என்னும் பெயரை கூறப்படுகிறது. தேயிலை செடியின் மொட்டுகள் மற்றும் இலைகள் முழுவதும் விரிவதற்கு முன்பு பறிக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இந்த மொட்டுகள் மீது சிறிய வெள்ளை முடிகள் இருப்பதால், இது வெள்ளை டீ என்னும் பெயரை பெற்றுள்ளது.

2 /10

வெள்ளை டீயில் உள்ள  ஊட்டச்சத்துக்கள் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். இதில் பாலிபினால்கள், பைட்டோநியூட்ரியன்கள் மற்றும் பல வகையான கேட்டசின்கள்,  டானின்கள், ஃப்ளோரைடு மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளன.  

3 /10

க்ரீன் டீ யை விட  20 முதல் 30 % வரை உயர் ஆண்டி ஆக்ஸிடண்ட் தன்மை கொண்ட வெள்ளை டீ உடலில் இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்கள் செல்களை அழித்து, செல்களை புதுப்பிக்கிறது. இதனால் முதுமையை ஓட விரட்டலாம். முகத்தில் தோல் தொங்கத் தொடங்கும் நபர்கள், தொடர்ந்து ஒயிட் டீ குடித்து வந்தால், முகம் இளமையாக இருக்கும்.

4 /10

ஒயிட் டீ குடிப்பதால் புத்துணர்ச்சி அடைவதோடு சோர்வு நீங்கும். காலையில் ஒயிட் டீ குடித்து வந்தால், நாள் முழுவதும் ஆற்றல் நிறைந்து இருக்கும். 

5 /10

ஒயிட் டீ குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது, இது தொற்றுநோயைத் தடுக்கிறது.

6 /10

ஒயிட் டீ குடிப்பதால், இனிப்பு சாப்பிடும் நாட்டம் குறையும், இது உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும். இதனால் உடல் பருமன் முதல், நீரிழிவு வரை அனைத்தும் கட்டுப்படும். வெள்ளைத் தேநீரில் உள்ள கேடசின்ஸ் என்ற ஒரு பொருள் டைப் 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது.

7 /10

அஜீரண பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக ஒயிட் டீயை அருந்தினால், மலச்சிக்கல் மற்றும் வாயுத்தொல்லை, வயிற்று உப்பிசம் போன்ற ஆஜீரணம் தொடர்பான நோய்கள் அனைத்தும் குணமாகும்.

8 /10

ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும் பாலிபினால்கள் வெள்ளை தேநீரில் காணப்படுகின்றன. மேலும் வெள்ளை தேநீரை தினமும் அருந்துவது, உங்கள் மூளையை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.

9 /10

ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கட்டாயம் ஒயிட் டீ குடிக்க வேண்டும். கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதன் மூலம் உயர் பிபி, சர்க்கரை நோய், மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது.

10 /10

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.