குபேரரின் ஆசியை வாழ்நாள் முழுவதும் பெறும் 3 அதிர்ஷ்ட ராசிகள்!

Favourite Zodiacs of Lord Kuber: இந்துமதத்தில், அன்னை மகாலட்சுமி, குபேரர் இருவருமே செல்வத்தை அள்ளி வழங்கும் தெய்வங்களாக கருதப்படுகிறார்கள்.  வாழ்வில் செல்வம் குறையாமல் இருக்கவும் அன்னை லட்சுமியையும் குபேரரையும் சேர்த்து வணங்குவது வழக்கம். 

மகாலட்சுமியுடன் குபேரரையும் சேர்ந்து வணங்குபவர்களின் வாழ்க்கையில் பணத்திற்கும், செல்வத்துக்கும் பஞ்சம் இருக்காது என்பது ஐதீகம். குபேரரின் அருள் இருந்தால் வாழ்நாள் முழுவதும் நிதி நெருக்கடி என்பதே ஏற்படாது. 

1 /7

நவக்கிரகங்களின் பெயர்ச்சிகள், கிரக சேர்க்கைகள் என தசைகள் என அனைத்துவிதமான இயக்கங்களுக்கு அனைத்து ராசிகளையும் பாதிக்கும் என்றாலும், சில ராசிகள், சில தெய்வங்களின் அனுகிரகத்தினால், பாதிப்பு ஏதும் இல்லாமல் இருப்பார்கள். செல்வம் குறையாமல் இருக்க லட்சுமி மற்றும் குபேரன் ஆகிய இரண்டு கடவுள்களையும் வணங்குவது வழக்கம்.

2 /7

லட்சுமி குபேர பூஜை குறையாத செல்வத்தைக் கொடுக்கும். குபேரரின் அருள் இருந்தால் வாழ்க்கையில் செல்வ செழிப்பு குறையாமல் இருக்கும் என்பது ஐதீகம். குபேர பகவானின் அருள் ஆசி இருந்தால் வாழ்க்கையில் எப்போதும் செல்வ செழிப்பிற்கு குறை இருக்காது. செல்வம், மகிழ்ச்சி, நிம்மதி மற்றும் மதிப்பு என மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும். 

3 /7

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசிக்கும் அதன் அதிபதியாக ஏதேனும் ஒரு கிரகம் இருப்பது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு ராசிக்கு உகந்த தெய்வமும் இருக்கும். அந்த வகையில் குபேர பகவான் அபரிமிதமான அருளைப் பெறும் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல சவால்கள் இருந்தாலும் அவற்றை எளிதில் சமாளித்து விடுவார்கள்.

4 /7

ரிஷப  ராசிக்கு அதிபதியாக சுக்கிரன். அதோடு குபேரனின் அருள் ஆசியும் எப்போதும் இருக்கும். எங்கள் வாழ்க்கையில் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வாழ்க்கையில் வரும் அனைத்து சிரமங்களையும் எளிதாக சமாளிக்கும் திறன் இருக்கும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி நிச்சயம். இவர்களுக்கு சமூகத்திலும் நல்ல பெயர் இருக்கும். 

5 /7

கடக ராசிக்கு அதிபதி சந்திரன். மிகவும் அமைதியான குணாதியசியம் கொண்ட நபராக இருக்கும் இந்த ராசிக்காரர்கள் தங்கள் கடின உழைப்பால் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெறுவார்கள். சவாலைகளை சமாளித்து , வாழ்க்கையில் உயரத்தை எட்டும் திறமை இவர்களிடம் இருக்கும். குபேரனின் ஆசியுடன், கிடைக்கும் சிறிய வாய்ப்பையும் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் திறன் கொண்டவர்கள்.

6 /7

தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். இந்த ராசிகளுக்கு குபேரனின் ஆசியும் பரிபூரணமாக இருக்கும். அவர்களுக்கு ஆன்மீகத்தின் மீது அதிக நாட்டம் இருக்கும். வாழ்க்கையில், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்து இருக்கும். இந்த ராசிக்காரர்கள் கடினமாக உழைக்க தயங்கவே மாட்டார்கள். இதன் காரணமாக எல்லா துறைகளிலும் வெற்றியை பெறுகிறார்கள். இதனால் நிறைய பணம் சம்பாதிக்கும் வாய்ப்பையும் பெறுகிறார்கள். வாழ்வில் பொருள் இன்பங்களுக்குக் குறைவே இருக்காது.  

7 /7

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.