விஜய் நடித்து வரும் GOAT படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

விஜய் நடித்து வரும் GOAT படத்தை ஜூன் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.  படத்தில் நிறைய சிஜி காட்சிகள் இடம் பெற உள்ளது.

 

1 /5

விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.  இந்த படத்திற்கு GOAT என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.  

2 /5

இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகி பாபு, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என பலர் நடித்து வருகின்றனர்.   

3 /5

நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். பிகில் படத்திற்கு பிறகு ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.  

4 /5

கடந்த ஆண்டு தொடங்கிய GOAT படத்தின் படப்பிடிப்பு சென்னை, தென்னாப்ரிக்கா, ஹைதராபாத், புதுச்சேரி ஆகிய இடங்களில் நடைபெற்றது. தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.  

5 /5

இலங்கை செல்ல இருந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது படக்குழு ரஷ்யா செல்ல உள்ளது. மார்ச் மாத இறுதியுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைய உள்ளது.