எக்கச்சக்க ஓடிடிகள் இலவசம்... ஒரே பிளானில் ஓஹோனு ஆப்பர்... வெறும் 248 ரூபாய் தான்!

Vodafone Idea: வோடபோன் ஐடியா நிறுவனம் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள ஒரு பிளானில் பல ஓடிடிகளின் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், அந்த பிளானின் விலை மற்றும் கூடுதல் பலன்களை இதில் காணலாம்.

  • Jun 17, 2024, 22:07 PM IST

வோடபோன் ஐடியா நிறுவனம் தற்போதும் 4ஜி சேவையையே வழங்கப்படுகிறது.

 

1 /8

ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தொலைத்தொடர்பு துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், வோடபோன் ஐடியா நிறுவனமும் கடும் போட்டியை அளிக்கிறது.   

2 /8

வோடபோன் ஐடியா நிறுவனம் ஓடிடி பிரியர்களுக்காக தற்போது புதிய பிளான் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இது ஓடிடி பலன்கள் மட்டுமின்றி டேட்டா பலன்களையும் அளிக்கிறது. அதாவது ஒரு கல்லில் இரண்டு மாங்காயை அளிக்கலாம்.   

3 /8

248 ரூபாய்க்கு இந்த பிளானை வோடபோன் ஐடியா வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 1 மாதமாகும். இருப்பினும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த திட்டமாகும்.   

4 /8

இந்த டேட்டா பிளானில் மொத்தம் 6ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும், Vi Movies & TV (MTV) Pro சந்தாவும் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 202 ஆகும். அதாவது ஓடிடி 202 ரூபாய், டேட்டாவுக்கு 46 ரூபாய் ஆகும். 

5 /8

இதில் உங்களுக்கு  SonyLIV, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், FanCode, Klikk, Manorama Max, Chaupal, Playflix, Nammaflix, Distro TV, Shemaroo Me, Hungama, YuppTV, NexGTV and Pocket Films ஆகிய ஓடிடிகள் இலவசமாக கிடைக்கும்.  

6 /8

இந்த ஓடிடிகளை நீங்கள் மொபைலிலும், டிவியிலும் பார்க்கலாம். மேலும், இந்த பிளானில் 400 டிவி சேனல்களுக்கு சேர்க்கப்பட்டுள்ளது. அதன் சந்தாவும் இலவசமாகும்.   

7 /8

இது டேட்டா Addon பிளான் ஆகும். இதனை நீங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றால் உங்களிடம் அடிப்படை பிளான் இருக்க வேண்டும்.   

8 /8

இந்த 248 ரூபாய் பிளானில் டேட்டா பலன்கள் இருக்கிறதே தவிர காலிங் வசதியோ அல்லது எஸ்எம்எஸ் வசதியோ இதற்கு கிடையாது.