உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து னது தாக்குதலை தொடர்ந்து வருவதால், நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குறித்த சுவாரஸ்ய தகவல்களை அறிந்து கொள்ளலாம்...
ரஷ்யாவுடனான போரில் உக்ரேனிய இராணுவத்தை ஜனாதிபதி ஜெலென்ஸ்கியே வழிநடத்துகிறார். ஜெலென்ஸ்கி போரின் போது உக்ரேனிய பிரதமர் மற்றும் பிற அதிகாரிகளுடன் களத்தில் இருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோவில், 'நாங்கள் அனைவரும் நம் நாட்டிற்காக களத்தில் இருக்கிறோம். நம் நாட்டிற்காக போராடுவோம்’ என உறுதி கூறினார்.
அதிபரான பிறகு, ஜெலென்ஸ்கி தனது அலுவலகத்தில் அவரது புகைப்படங்களை வைக்க வேண்டாம் என்று தனது அதிகாரிகளை கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. என்னை ஐகானாக நினைக்க வேண்டடாம். எனது புகைப்படத்திற்கு பதிலாக, அரசு அதிகாரிகள் தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை அலுவலகத்தில் வைத்து, எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன், தனது குழந்தைகளின் புகைபப்டத்தை பார்த்து, அதன் பிறகு எடுக்க வேண்டும் என்றார்.
Zelensky சிறந்த நடனக் கலைஞர்களில் ஒருவர். இவரது நடன வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சாமானியனைப் போலவே தனது தனிப்பட்ட வாழ்க்கை, தனது குழந்தைகள் தொடர்பான படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு மிகவும் ஆக்டிவ் ஆக உள்ளர்.
ஜெலென்ஸ்கி நாட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு அமெரிக்காவால் பரிந்துரைத்த நிலையில், அவர் அந்த யோசனையை நிராகரித்து நான் நாட்டை விட்டு ஓடமாட்டேன் என்று கூறியிருந்தார். என் கடைசி மூச்சு வரை போராடுவேன் என்றார்.