சனி - ராகு இணைவு... இந்த மூன்று ராசிகளின் வாழ்க்கை அதோ கதிதான்...!

Saturn Rahu Conjunction, Astro Tips In Tamil: அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் மீன ராசியில் ராகுவுடன், சனியும் இணைவதால் இந்த மூன்று ராசிகளின் வாழ்க்கை மிகவும் கடினமானதாக மாறிவிடும்.

சனி பகவானும், ராகு பகவானும் ஒரு ராசியில் இணைந்தால் பிசாச யோகம் ஏற்படும். இதனால், சில ராசிகளின் ஜோதகத்தில் அசுபம் உண்டாகி, வாழ்வும் கடினமாகும். அந்த வகையில், அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் மீன ராசியில் ராகுவுடன், சனி பகவானும் இணைகிறார் என்பதால் இந்த மூன்று ராசிகளின் வாழ்வில் பிரச்னை அதிகரிக்கும்.

 
1 /8

நீங்கள் செய்யும் கர்மவினைக்கு ஏற்ற பலனை வழங்குபவர் சனி பகவான் (Lord Saturn) என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழிக்கு ஏற்ப, நீங்கள் செய்யும் வினைக்கு பலனை அவர் தருவார். ஒருவரின் ஜாதகத்தில் சுபமான இடத்தில் இருந்தால், உங்களுக்கு வாழ்க்கையும் சுபமாக இருக்கும். அதேநேரத்தில் அசுபமாக இடத்தில் வாழ்க்கையில் பல பிரச்னைகள் புகுந்துவிடும்.   

2 /8

சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் இருப்பார். அதாவது மொத்தம் 12 ராசிகளையும் சுற்றி முடிப்பதற்கு ஏறத்தாழ 30 ஆண்டுகள் முடிந்துவிடும். அந்த வகையில் தற்போது கும்பத்தில் இருக்கும் சனி மீன ராசிக்கு அடுத்தாண்டு மாற உள்ளார். மீன ராசியில் ஏற்கெனவே ராகு பகவான் வீற்றிருக்கிறார்.   

3 /8

ராகு பகவான் (Rahu) இருக்கும் மீன ராசியில் சனி பகவானும் பெயர்ச்சி ஆனால், பிசாச யோகம் (Pishach Yog) ஏற்படும். இது மிகவும் அசுபமானதாகும். அந்த வகையில் இந்த காலகட்டம் சில ராசிக்காரர்களின் வாழ்வில் கடுமையான காலகட்டமாக அமையும்.  

4 /8

ஜோதிடர்களின் கூற்றுப்படி சனி பகவான் அடுத்தாண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி 10.07 மணியளவில் மீனத்தில் பெயர்ச்சி ஆவார். அந்த நேரத்தில் ராகுல் அங்கு இருப்பதால் பிசாச யோகம் உருவாகும். அடுத்தாண்டு மே 18ஆம் தேதி ராகு பகவான் மீனத்தில் இருந்து கும்பத்திற்கு பெயர்ச்சி ஆவார். அதுவரை இந்த பிசாச யோகம் நீடிக்கும். இதனால் இந்த மூன்று ராசிகளின் வாழ்க்கை கடினமானதாக மாறும்.   

5 /8

துலாம் (Libra): அடுத்தாண்டு வரும் மார்ச் மாதத்தில் இருந்து இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் பிரச்னை வரலாம். வீட்டில் சண்டை வர வாய்ப்புள்ளது. வணிக பார்ட்னருடனும் பிரச்னை வரலாம். எப்போதும் சாந்தமாக இருங்கள், தேவையில்லாமல் செலவழிக்காதீர்கள். புதிய முதலீடுகள் வேண்டாம்.  

6 /8

மகரம் (Capricon): மகா பிசாச யோகத்தால் உடல்நிலையும் பாதிக்கப்படலாம். எனவே, பெரும்பாலும் வெளியில் சாப்பிடுவதை தவிர்த்து வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள். உடன்பிறந்தவர்கள் மற்றும் உறவினர்கள் உடனான உறவில் விரிசல் ஏற்படும். பயணம் மேற்கொள்வதை தவிருங்கள், விபத்து வாய்ப்பு உள்ளது. பணத்தையும் பார்த்து செலவிடுங்கள்.  

7 /8

மீனம் (Pisces): சனியும் ராகுவும் சேர்வதால் (Shani Rahu Yuti) மீன ராசிக்காரர்களின் வாழ்வு இன்னும் சற்று கடினமான சூழலுக்கு செல்லும். மிகுந்த உடல் சோர்வுடன் இருப்பீர்கள். மன அழுத்தத்திற்கும் தள்ளப்படுவீர்கள். வியாபாரத்தில் நஷ்டம் வரும். உறவினர்கள் உடனான உறவில் பிரச்னை வரும். கடன் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.   

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான நம்பிக்கைகள், கணிப்புகள் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை.