சாப்பிட்ட பின் 10 நிமிட வாக்கிங்... உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்!

சாப்பிட்ட பிறகு நடப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும் உடலியல் மற்றும் உளவியல் ரீதியான பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது. உடலியல் ரீதியாக, உணவுக்குப் பிறகு நடப்பது  அஜீரணம், நெஞ்செரிச்சல், ஆசிடிட்டி பிரச்சனை, உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, நீரிழிவு நோய், உடல் பருமன் போன்றவற்றுக்கு தீர்வைத் தருகிறது. 

நடைப்பயிற்சி உங்கள் மன ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. மேலே குறிப்பிட்டுள்ளவை தவிர உணவு உண்ட உடனேயே நடப்பதினால், ஆழ்ந்த தூக்கம், புத்துணர்ச்சி மற்றும்  சிறந்த மனநிலை மற்றும் நினைவாற்றல் ஆகியவை சிறப்பாக இருப்பதோடு மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறையும்.

1 /8

உணவு உண்ணும் போது மணிக்கணக்கில் உட்கார்ந்து சாப்பிடுவது அல்லது சாப்பிட்ட உடனேயே படுத்துக்கொள்வதால், பல வித நோய்கள் உடலில் நுழைந்து, உடல் நோயின் கூடாரமாகி விடுகின்றன. இதனை தவிர்க்க, சாப்பிட்ட பிறகு, 10 நிமிடங்களுக்கு வாக்கிங் போவதால், எண்ணற்ற நன்மைகளை பெறலாம் .

2 /8

தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், இரவு உணவு சாப்பிட்ட உடனேயே குறைந்தது 10 நிமிடங்களாவது நடக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை பிரச்சனை நீங்கும். நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

3 /8

உணவு உண்ட உடனேயே நடப்பது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல், இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. உடலில் எல்.டி.எல் கொழுப்பின் அளவைக் குறைத்தல், இருதய செயல்பாட்டை மேம்படுத்துதல் போன்ற பல நன்மைகள் உள்ளன என்று ஆராய்ச்சி கூறுகிறது.

4 /8

நீரிழிவு நோயாளிகள் உணவுக்குப் பின் நடப்பதால் பெரிதும் பயனடையலாம். ஹெவியான உணவை உட்கொள்வது குறிப்பாக கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவை உண்பதால், இரத்த சர்க்கரை அளவு மிகவும் அதிகரிக்கும். உணவு உண்ட உடனேயே நடைப்பயிற்சி மேற்கொள்வது சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.

5 /8

சாப்பிட்ட பிறகு நடைபயிற்சி செய்வது செரிமான அமைப்பை வலுவாக்கும், வாயுத் தொல்லை,  ஆசிடிட்டி, வயிற்று பிரச்சனைகள் போன்ர செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் சரியாகும்.

6 /8

சாப்பிட்ட உடனேயே படுத்துக்கொள்வதால் உடல் பருமன் அதிகரிக்கும். உணவு சாப்பிட்ட பிறகு 10 நிமிடங்கள் நடப்பதால் உடல் பருமன் பிரச்சனையை பெருமளவு குறைக்கிறது.

7 /8

சாப்பிட்ட பிறகு 10 நிமிட நடை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உணவு உண்ட பின் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் நச்சுக்கள் வெளியேறும். இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. 

8 /8

பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்க மட்டுமே. மேலும் தகவலுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.