திருமண பத்திரிக்கையில் இந்த தவறை மட்டும் செய்ய கூடாது!

Wedding Card Vastu: திருமண பத்திரிக்கை தொடர்பான சில விதிகள் வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றினால், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க, சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.

 

1 /6

திருமணம் இந்து மதத்தில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை. திருமணம் என்பது இருவரின் வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கமாகும். திருமணத்தின் போது, ​​சிறிய தவறு கூட மண மக்களின் எதிர்காலத்தை பாதிக்காமல் இருக்க பல விஷயங்கள் சிறப்பு கவனம் செலுத்தப்படுகின்றன.   

2 /6

திருமணம் போன்ற விஷயங்களில், ஆடை முதல் உணவு, திருமண பத்திரிக்கை வரை அனைத்திற்கும் சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தில் கூட திருமண அட்டைகள் குறித்து பல விதிகள் கூறப்பட்டுள்ளன.   

3 /6

வாஸ்து படி, திருமண பத்திரிக்கையில், ​​தாமரை போன்ற சில மலர்களை வைப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இதனால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.  

4 /6

வாஸ்து சாஸ்திரத்தின் படி, திருமண பத்திரிகையில் ​​அதன் அளவு குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பெரிய அல்லது முக்கோண வடிவ திருமண பத்திரிக்கையை ஒருபோதும் அடிக்க கூடாது. எப்போதும் நான்கு மூலைகளை கொண்ட திருமண பத்திரிக்கை மங்களகரமானதாக கருதப்படுகிறது.   

5 /6

இவை அனைத்தையும் தவிர்த்து திருமண பத்திரிகை நிறத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்பது வாஸ்து நிபுணர்களின் கருத்து. திருமண பத்திரிகை ஒருபோதும் கருப்பு நிறத்தில் இருக்கக்கூடாது. அதாவது, தவறுதலாக கூட கருப்பு அல்லது பழுப்பு போன்ற கருமை நிறத்தில் இருக்க கூடாது.   

6 /6

இது தவிர, திருமண பத்திரிகையில் மணமகன் மற்றும் மணமகள் அல்லது பிற குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் எந்த அடர் நிறத்திலும் எழுதப்படக்கூடாது. சிவப்பு அல்லது வெளிர் நிறத்தில் திருமண பத்திரிகை இருக்கலாம்.  மேலும் திருமண பத்திரிகையில் பயன்படுத்தப்படும் காகிதம் நறுமணத்துடன் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.