Weekly Horoscope : நாம் அனைவரும் நமது எதிர்காலத்தை அறிந்து கொள்ள விரும்புகிறோம், எதிர்கால வாழ்க்கை நமக்கு சாதகமாக இருக்குமா என்ற ஆவலை தணிக்கும் ஜோதிடம், வரும் வாரத்திற்கான ராசிபலனை இவ்வாறு கணித்திருக்கிறது...
செப்டம்பர் 23 முதல் 29ம் தேதி வரையிலான வரும் வாரம் 12 ராசிகளுக்கு எப்படி இருக்கும்? புதன் கன்னிக்கு மாறுவது, பித்ரு பட்சம் என பல முக்கியமான நிகழ்வுகள் நடைபெறவிருக்கும் வாரத்திற்கான ராசிபலன்கள்....
செப்டம்பர் 23 திங்கட்கிழமை முதல் செப்டம்பர் 29 ஞாயிற்றுக்கிழமை வரையிலான ஏழு நாட்களுக்கான ராசிபலன்களை தெரிந்துக் கொள்வோம். இந்த வாரம் முழுவதும் மாகாளய பட்சத்தில் வருகிறது. எனவே இந்த வார ராசிபலன்கள் மிகவும் முக்கியமானவை.
பிறர்டன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கக்கூடும், வாரத்தின் நடுப்பகுதியில் சிக்கலில் இருந்து விடுபடும் வாய்ப்புகள் வரும். வருமானம் குறைவாக இருக்கும் ஆனால் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் கவனமுடன் செயல்படுவது நல்லது
விளையாட்டுத்துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் கவனமாக இருக்கவும். குடும்பத்தில் மூத்தவர்களின் அறிவுரைகளை கேட்டு நடப்பது நல்லது. குடும்பத்தினர் ஊக்கம் கொடுப்பார்கள், பண விவகாரங்களில் இந்த வாரம் எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்
வீட்டிற்கு புதிய பொருட்களை வாங்கலாம். மிதுன ராசிக்காரர்களுக்கு வரும் வாரத்தின் நடுப்பகுதியில் மேலதிகாரியுடன் வாக்குவாதம் ஏற்படலாம். இதனால் மன அழுத்தம் அதிகரிக்கலாம், காதல் வாழ்க்கை மகிழ்ச்சியைத் தரும்
கடக ராசிக்காரர்களுக்கு வியாபாரத்திற்கு சாதகமாக வாரம் இது. வார இறுதியில் திடீர் செலவுகள் அதிகரிக்கும். எந்த முடிவையும் எடுக்க முடியாது. புதிய வேலை வாய்ப்புகள் வந்தால் தவிர்க்க வேண்டாம்
மகிழ்ச்சியான செய்திகள் வருவதால், சிம்ம ராசிக்காரர்களின் குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த செய்திகள் வந்து சேரும். குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும், மனதில் ஆசுவாசம் ஏற்படும்
தந்தையின் உடல்நிலை மோசமடையலாம். வாரத்தின் கடைசி நாட்களில் காதல் வாழ்க்கையில் பிரச்சனை வரலாம், கோபப்பட்டால் பிரச்சனை முடிவுக்கு வராது என்பதைப் புரிந்துக் கொண்டால் சிக்கல்களை சுலபமாக தீர்க்கலாம் கன்னி ராசிக்காரர்களே...
ஆக்கப்பூர்வமான சிந்தனையுடன் வேலையை சில புதிய வழியில் முன்னோக்கி கொண்டு செல்ல முயற்சிப்பீர்கள், அது வெற்றிகரமாக இருக்கும் என்பதால் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும்
விருச்சிக ராசியினர் நினைத்த காரியங்கள் சட்டென்று முடியாமல் இழுத்துக் கொண்டே போகும். தாழ்வு மனப்பான்மையை விலக்கி வையுங்கள். இல்லாவிட்டால் அது உங்களை எதுவும் செய்யவிடாமல் முடக்கிபோட்டுவிடும், மனதில் கவலைகள் அதிகரிக்கும்,
ஆன்மீக சிந்தனைகள் அதிகரிக்கும். தொழில் சார்ந்த வேலைகள் தாமதமாகிக் கொண்டே செல்வது மனதில் கவலைகளை ஏற்படுத்தும் என்றாலும் சில எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்பதால் ஓரளவு நல்ல வாரம் என்று தனுசு ராசியினர் ஆசுவாசப்பட்டுக் கொள்ளலாம்
குடும்பத்தினரின் உண்மையான பாசத்தை உணர்வீர்கள். குடும்பத்தினருடன் அனுசரித்து செல்வதில் தவறில்லை என்ற எண்ணம் உருவாகும். மகர ராசிக்காரர்களுக்கு மன நெகிழ்ச்சியான காலம் இது
கும்ப ராசிக்காரர்களுக்கு பித்ரு பக்ஷத்தில் வரும் வாரம் மனதில் அமைதி ஏற்படும் வாரமாக அமையும். ஆசைகள் மட்டுப்படும், ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும்
மீன ராசிக்காரர்களின் மனதில் ஆசைகள் அதிகரிக்கும். ஆசைக்கான செலவுகளையும் செய்யத் துடிப்பார்கள். ஆனால், வருமானத்திற்கு ஏற்ற ஆசைகளை வளர்த்துக் கொள்ளாவிட்டால் ஏமாற்றமே மிஞ்சும்
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது