உடல் பருமனா? இதையெல்லாம் செய்யாமல் இருந்தால்... விரைவில் எடை குறையலாம்

Weight Loss Mistakes: நவீன வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால், உடல் பருமன் பிரச்சனை வேகமாக அதிகரித்து வருகிறது. உடல் எடை அதிகரிப்பது இப்போது அனைவருக்கும் உள்ள பொதுவான பிரச்சனையாகி உள்ளது. 

எடை அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் நமது வளர்சிதை மாற்றமாகும். நமது வளர்சிதை மாற்றம் எவ்வளவு மெதுவாக உள்ளதோ, எடை அதிகரிப்பதற்கான ஆபத்து அவ்வளவு அதிகமாக இருக்கும் என்று புரிந்து கொள்ள வேண்டும். எடையை இழக்க முயற்சிப்பவர்கள் செய்யக்கூடாத சில முக்கிய விஷயங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /10

எடை அதிகரிப்பு: ஒரு நபரின் வயது, எடை, உயரம் மற்றும் பாலினம் போன்ற காரணிகள் நமது வளர்சிதை மாற்ற விகிதத்தை பாதிக்கலாம். மேலும், நமது உணவு மற்றும் வாழ்க்கை முறையும் நமது வளர்சிதை மாற்றத்தை பாதிக்கலாம். வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும் சில பழக்கங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.   

2 /10

சமநிலையற்ற உணவு: வறுத்த மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் சாப்பிடுவது, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் இனிப்புகளை உட்கொள்வது உடலில் கொழுப்பை அதிகரிக்கும். உங்கள் வயிறு பெரிதாவதற்கும் இதுவே காரணமாக இருக்கலாம்.

3 /10

குறைந்த உடல் செயல்பாடு: அதிக செயல்பாடு இல்லாத வாழ்க்கை முறை மற்றும் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால், உடலின் மெட்டபாலிசம் குறைந்து, கொழுப்பு சேர வழிவகுக்கும்.

4 /10

அதிக மன அழுத்தம்: அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் பதற்றம் உடலின் கார்டிசோலின் அளவை அதிகரிக்கலாம், இது எடை அதிகரிக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.

5 /10

தூக்கமின்மை: தூக்கமின்மை உடலின் ஹார்மோன் கட்டுப்பாட்டை பாதித்து, அதிகமாக சாப்பிடும் ஆசையை அதிகரிக்கும். இதனால் எடை அதிகரிக்கும்.

6 /10

மதுப்பழக்கம்: அதிகப்படியாக மதுபானம் உட்கொள்வதால், உடலில் கூடுதல் கலோரிகள் சேமிக்கப்பட்டு, கொழுப்பு சேரும். இது எடை அதிகரிக்க முக்கிய காரணம் ஆகின்றது.

7 /10

வைட்டமின் மற்றும் தாது குறைபாடுகள்: வைட்டமின் மற்றும் தாது குறைபாடுகள் உடல் செயல்முறைகளை பாதிக்கலாம். இது எடை அதிகரிப்பையும் ஏற்படுத்தும்.

8 /10

புரத குறைபாடு: போதுமான புரதத்தை உட்கொள்ளாததால், உடலின் வளர்சிதை மாற்றம் மெதுவாக செயல்படத் தொடங்குகிறது. உடலில் உள்ள தசை திசு மற்றும் தசை மீட்புக்கு புரதம் மிகவும் முக்கியமானது. இது வளர்சிதை மாற்றத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

9 /10

நீண்ட நேரம் அமர்ந்திருப்பது: அதிக நேரம் அமர்ந்திருப்பது உங்கள் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும். நீங்கள் நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் போது, ​​உங்கள் உடலின் கலோரிகளை எரிக்கும் திறனை குறைகிறது.

10 /10

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.