சாப்பாடு மட்டும் இல்லை! இந்த காரணங்களாலும் உடல் எடை அதிகரிக்கும்!

தற்போது பலருக்கும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை இருந்து வருகிறது. உடலில் ஏற்படும் ஒருவித ஹார்மோன் மாற்றங்கள் காரணமாகவும் உடல் எடை அதிகரிக்கும்.

1 /7

சரியான உணவு இல்லாத காரணத்தால் பெரும்பாலான மக்களுக்கு உடல் எடை அதிகரிக்கிறது. எனவே உடல் எடையை குறைக்க பலரும் செய்யும் முதல் முயற்சி உணவை குறைப்பது தான்.

2 /7

மேலும் உடல் எடை அதிகரிக்க சரியான தூக்கம் இல்லாமை, ஆல்கஹால், இரவு தாமதமாக சாப்பிடுதல் போன்ற காரணங்களும் உள்ளன. இதனால் முகம் மற்றும் வயிறு பெரிதாகிறது.

3 /7

உடல் எடையை சரியான முறையில் குறைக்க முறையான உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளை பின்பற்றுவது அவசியமான ஒன்று. சத்தான உணவுகளை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும்.

4 /7

கார்டிசோல் அல்லது மன அழுத்த ஹார்மோன் அதிகரிக்கும் போது உடல் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆரோக்கியத்திலும் தீங்கு விளைவிக்கிறது.

5 /7

ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கும் போதெல்லாம், கார்டிசோல் சுரப்பி உடலில் அதிகரிக்கிறது. எனவே நீண்ட நாள் ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கும் போது உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

6 /7

உடல் எடை அதிகரிப்பு மட்டும் இன்றி, உடலில் கார்டிசோல் அதிகரித்தால் இருதய பிரச்சினை, இன்சுலின் எதிர்ப்பு, வளர்ச்சிதை மாற்றம் போன்ற அபாயத்தை அதிகரிக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.  

7 /7

எனவே தினசரி ஆரோக்கியமான உணவு, நல்ல தூக்கம், காலை மற்றும் மாலை உடற்பயிற்சி, மது குடிக்காமல் இருப்பது மற்றும் மன அழுத்தத்தை குறைப்பது போன்றவற்றை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.