தினசரி சீரகம் கலந்த தண்ணீர் குடித்து வந்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

ஆயுர்வேதத்தின்படி சீரகம் பல அற்புத நன்மைகளை கொண்டுள்ளது. குறிப்பாக கோடை காலத்தில் சீரக தண்ணீர் குடித்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

 

1 /6

இந்தியாவில் சமைக்கப்படும் உணவுகளில் ஆரோக்கியம் நிறைந்த பல பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. அப்படிபட்ட மசாலாப் பொருட்களில் சீரகமும் ஒன்று.   

2 /6

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் சீரக தண்ணீர் குடிக்கலாம். இது குறைந்த கலோரி கொண்ட பானமாக இருப்பதால் எடையை குறைக்க உதவுகிறது.   

3 /6

பிசிஓஎஸ் பிரச்சனை உள்ள பெண்கள் மற்றும் மாதவிடாய் பிரச்சனை உடையவர்கள் சீரக தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது.   

4 /6

உங்களுக்கு அதிகம் செரிமான பிரச்சனை இருந்தால் சீரக தண்ணீர் தினமும் குடிக்கலாம். வயிற்று வலி உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு சீரக தண்ணீர் உதவுகிறது.  

5 /6

சீரக தண்ணீர் குடித்து வந்தால் வளர்சிதை மாற்றத்தை பராமரிக்க பெரிதும் உதவும். காலையில் எழுந்ததும் சீரக தண்ணீர் குடிப்பதால் நச்சுத்தன்மையை குறைக்க உதவுகிறது.  

6 /6

சீரகம் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. சாப்பிட பிறகு ஏற்படும் வாயு மற்றும் வீக்கத்தைக் குறைக்கின்றன. மேலும் குடல் இயக்கத்திற்கு உதவுகிறது.