வரலாற்றில் இந்த நாள் ஒரு முக்கியமான நாள். இன்றைய சரித்திரத்தின் பொன்னேடுகளில் பொறிக்கப்படட முக்கிய நிகழ்வுகள் என்ன தெரியுமா?
புதுடெல்லி: அறிவியல் என்பது மாறிக் கொண்டேயிருப்பது, மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கான நிதர்சனம், மாறும் சூழல். ஆனால் அறிவியலும், சரித்திரமும் ஒன்றுடன் ஒன்று முரண்படும், சரித்திரம் தனது பொன்னேடுகளில் பல முக்கிய நிகழ்வுகளை பதிவு செயது பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறது. இன்றைய நாள் ஜனவர் 2ஆம் தேதி குறித்து சரித்திரத்தின் ஏடுகள் என்ன சொல்கின்றன?
Also Read | நாடு முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி
1941: WWII இரண்டாம் உலகப்ப் போரில் ஜெர்மன் வீசிய குண்டு, இங்கிலாந்தின் (UK) புகழ்பெற்ற லாண்டாஃப் கதீட்ரலை (Llandaff Cathedral) சேதப்படுத்தியது
1954: இந்தியா தனது மிக உயர்ந்த சிவில் விருதுகளான பாரத ரத்னா & பத்ம விபூஷன் ஆகியவற்றை உருவாக்கியது
1971: ஸ்காட்லாந்தின் (Scotland) கிளாஸ்கோவில் நடந்த இப்ராக்ஸ் (Ibrox) துயர நிகழ்வில் 66 கால்பந்து ரசிகர்கள் இறந்தனர். இது கால்பந்து ரசிகர்களின் மனதில் மாறாத வடுவாய் மாறியது.
1959: சோவியத் யூனியனின் (USSR) லூனா 1 (Luna 1) அறிமுகப்படுத்தப்பட்டது
2004: நாசாவின் ஸ்டார்டஸ்ட் வால்மீன் வைல்ட் 2 இலிருந்து பூமிக்கு தூசிகளை (dust grains) கொண்டு வருகிறது