தினமும் பழங்கள் சாப்பிடுவது நல்லது. அந்தந்த சீதோஷ்ண காலங்களில் அதிகம் விளையும் பழங்களைச் சாப்பிட்டால் நல்லது. பழங்கள் மலச்சிக்கலைப் போக்கி உடலை நோயின்றி காக்கின்றன.
தினமும் பழங்கள் சாப்பிடுவது நல்லது. நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். எனவே தினமும் சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று பார்ப்போம் !
சிலர் எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள். சிலருக்கு கை, கால் மூட்டுக்களில் வலி அடிக்கடி உண்டாகும். சில சமயங்களில் தலைச் சுற்றலுடன் இலேசான மயக்கம் ஏற்படும். இவர்கள் தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடித்தால் இரத்தம் விருத்தியாகும். உடல் அசதி நீங்கும்.
இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவதால் இரத்தச் சோகை ஏற்படும். இந்த இரத்தச் சோகையை விரட்டியடிக்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.
வலுவற்று எலும்புகள் சிலருக்கு உண்டு. இதற்குக் காரணம் கால்சியச் சத்து குறைபாடே ஆகும். இவர்கள் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால் எலும்புகள் வலுவடையும்.
மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க பழங்களே சிறந்த மருந்தாகிறது. எனவே மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு சாத்துக்குடி பழம் சாப்பிடவும்.
பசியில்லாமல் சிலர் அவதியுறுவார்கள். இவர்களின் வயிறு எப்போதும் நிரம்பி உள்ளது போல் தோன்றும். இதற்கு சாத்துக்குடி பழத்தை தினமும் உண்டு வந்தால் ஜீரண சக்தியைத் தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.