SCSS பம்பர் திட்டம்: மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட் வருமானம், அசத்தல் வட்டி.. இன்னும் பல நன்மைகள்

SCSS: சேமிப்பு திட்டங்களில் பணத்தை சேமிப்பதில் விருப்பம் உள்ளவர்கள் அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்களில் சேமிக்கலாம். இவற்றில் பணத்தை டெபாசிட் செய்து ஒவ்வொரு மாதமும் உத்தரவாதமான வருமானம் ஈட்ட முடியும். இப்படிப்பட்ட பாதுகாப்பான திட்டங்களில் பணத்தை முதலீடு செய்ய விரும்பும் நபராக நீங்களும் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். 

இந்த பதிவில் தபால் அலுவலகத்தின் மிகச்சிறந்த சேமிப்பு திட்டத்தைப் பற்றி காணலாம். இதில் மூத்த குடிமக்கள் (Senior Citizens) ஒவ்வொரு காலாண்டிலும் ரூ.10250 சம்பாதிக்கலாம். தபால் அலுவலகத்தின் இத்திட்டம் தொடர்பான முழுமையான விவரங்களை இங்கே அறியலாம். 

1 /8

பணி ஓய்வுக்கு பிறகான வாழ்க்கையை இலக்காக கொண்ட சேமிப்பு திட்டங்களில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மிக முக்கியமான மற்றும் பிரபலமான திட்டமாக உள்ளது. 

2 /8

அஞ்சல் அலுவலக எஸ்சிஎஸ்எஸ் (SCSS) திட்டம் குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது. இதனுடன், இந்த திட்டம் விஆர்எஸ் எடுத்தவர்களுக்கும் பொருந்தும். தற்போது இத்திட்டத்திற்கு 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. 

3 /8

இந்தத் திட்டத்தில், மூத்த குடிமக்கள் ஒரே முறையில் வெறும் ரூ.5 லட்சத்தை டெபாசிட் செய்து, ஒவ்வொரு காலாண்டிலும் ரூ.10,250 சம்பாதிக்க முடியும். வட்டியில் இருந்து மட்டும் 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் வரை சம்பாதிக்கலாம். இதற்கான முழு கணக்கீட்டை இங்கே தெரிந்து கொள்ளலாம். 

4 /8

ஒன்றாக டெபாசிட் செய்யப்படும் பணம்: ரூ. 5 லட்சம், வைப்பு காலம்: 5 ஆண்டுகள், வட்டி விகிதம்: 8.2%, முதிர்வுத் தொகை: ரூ.7,05,000, வட்டி வருமானம்: ரூ 2,05,000, காலாண்டு வருமானம்: ரூ 10,250.  

5 /8

இந்த சேமிப்பு திட்டம் இந்திய அரசால் நடத்தப்படுகிறது. முதலீட்டிற்கான நம்பகமான மற்றும் பாதுகாப்பான விருப்பங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

6 /8

வருமான வரிச் சட்டம் பிரிவு 80C-ன் கீழ், முதலீட்டாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்குப் பலனைப் பெறுகிறார்கள். - இந்த தபால் அலுவலகத் திட்டத்தின் கணக்கை நாட்டில் உள்ள எந்த மையத்திற்கும் மாற்றலாம். இத்திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு ஒருமுறை வட்டி வழங்கப்படும்.

7 /8

இந்த கணக்கை திறக்க, ஏதேனும் தபால் அலுவலகம் (Post Office) அல்லது அரசு/தனியார் வங்கியில் கணக்கு தொடங்கலாம். கணக்கை திறக்க விரும்பும் நபர்கள் பால் அலுவலகம் அல்லது அரசு/தனியார் வங்கிக்கு சென்று ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும். 

8 /8

2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், அடையாளச் சான்றிதழ் மற்றும் பிற KYC ஆவணங்களின் நகல்களை படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். வங்கிக் கணக்கைத் திறப்பதன் நன்மை என்னவென்றால், டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் பெறப்பட்ட வட்டியை நேரடியாக வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யலாம்.