சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் என்ன மாற்றங்கள் நடக்கும்?

சர்க்கரை உடலுக்கு ஒரு நல்ல ஆற்றல் மூலமாகும். இருப்பினும் சில வகை சர்க்கரைகளை உணவில் சேர்த்து கொள்ளும் போது உங்கள் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். 

 

1 /6

உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, இரத்தத்தில் சர்க்கரை அளவை பாதிக்கிறது. மேலும் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கும். ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் என்ன மாற்றம் நடக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.  

2 /6

உணவில் சர்க்கரையை சேர்த்து கொள்ளவில்லை என்றால் உடல் எடை குறைய வழிவகுக்கும். சர்க்கரை சேர்க்கும் போது கலோரிகள் அதிகரித்து பசியை தூண்டுகிறது. எனவே சர்க்கரையை நீக்கும் போது கலோரி குறைந்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.  

3 /6

அதிகப்படியான சர்க்கரை இரத்த குளுக்கோஸ் அளவுகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இதனால் உடலின் ஆற்றல் மட்டங்கள் பாதிக்கப்படும். சர்க்கரையை குறைக்கும் போது நீடித்த ஆற்றலுக்கு உதவுகிறது.   

4 /6

அதிகப்படியான சர்க்கரை உடலில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் முகப்பரு மற்றும் தோல் அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. சர்க்கரையை தவிர்க்கும் போது தெளிவான சருமத்தை பெற உதவுகிறது.   

5 /6

சர்க்கரை உட்கொள்ளலை குறைக்கும்போது உடலில் கொலஸ்ட்ரால் அளவும் குறைகிறது. மேலும் இதயம் தொடர்பான நோய்களும் குறைந்து ஆரோக்கியத்தில் கூடுதல் நன்மையை தருகிறது.   

6 /6

உடலில் சர்க்கரை அதிகளவு சேர்ந்தால் மூளை செயல்பாட்டை பாதிக்கிறது. சர்க்கரையை குறைத்தால் இரத்த குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த முடியும். இதன் மூலம் ஒட்டுமொத்த அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தும்.